ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி:
முறைகேடு நடந்ததை நிரூபித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையென்றால் புகார் கூறியவர் தன்னுடையை பதவியை ராஜினாமா செய்ய தயாரா?. கல்வித்துறையில் தில்லுமுல்லுக்கு இடமில்லை.
மாவட்டம் தோறும் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். அதற்கான புத்தகங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் வரும் ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் மாணவர்கள் வரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் ஆசிரியர்கள் கூடுதலாக தேவைப்படுவதால்தான் ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் குறித்தும், பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் டி.டி.வி.தினகரனை சந்தித்தது குறித்தும், இரு அணிகள் இணைவது குறித்தும் கேட்டபோது, முதலமைச்சர்தான் இதற்கு பதில் கூறுவார் என்றார்.
he didnt say it is not true
ReplyDeleteTntet 2017 'Final key' eppo veliyiduveenga?
ReplyDeleteTntet 2017 'Final key' eppo veliyiduveenga?
ReplyDelete