முதுநிலை
ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு
அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர்
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2,500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 1,663 இடங்களை நிரப்ப,
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 7ல், தேர்வு
நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், 'முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படும். தகுதி யானவர்கள் விண்ணப்பம் அனுப்ப, இன்று வரை அவகாசம் அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.
இதற்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி கொடுப்பதாகக் கூறி, நேரடி நியமனம் செய்வதால், அவர்கள் இதுவரை பணியாற்றிய காலம் முடிவுக்கு வந்து, புதிய நியமனமாக கருதப்படும். இந்த உத்தரவை, பதவி உயர்வாக மாற்றினால் தான், ஏற்கனவே பணியாற்றிய காலமும் பணிமூப்பு கணக்கில் வரும் என்கின்றனர்.
இதற்கிடையில், 'பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுநிலை பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
Don't give the promotion to secondary grade teachers. They are all getting degrees from correspondence courses. For promotion also they must clear the TET exams. Then only they must be promoted to BT assistant.
ReplyDeleteYa good.but for every promotion you should ready to face exam
ReplyDeleteYa good.but for every promotion you should ready to face exam
ReplyDelete