பான் கார்டு எண்ணுடன், ஆதார் கார்டு எண்ணை, எஸ்.எம்.எஸ்., மூலமாக இணைக்கும்
வசதியை, வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. வருமான வரி கணக்கு
தாக்கல் செய்வோர், பான் கார்டு இல்லாமல் அதை செய்ய முடியாது.
அந்த பான் கார்டு எண்ணுடன், ஆதார் கார்டு எண்ணை,
கட்டாயம் இணைக்க வேண்டும் என, வருமான வரித்துறை அறிவித்தது. பின், வருமான
வரித்துறையின் இணையதளத்தின் மூலமாக, பான் கார்டுடன், ஆதார் கார்டை
இணைக்கும் வசதி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவற்றை,
மொபைல் போனில் இருந்து, எஸ்.எம்.எஸ்., வழியாக இணைக்கும் வசதியை, வருமான
வரித்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, UIDPAN என அடித்து, இடைவெளி விடாமல், ஆதார் எண்ணை பதிவு செய்ய
வேண்டும். பின், ஒரு எழுத்து இடைவெளி விட்டு, பான் கார்டு எண்ணையும் டைப்
செய்து, அதை, 567678 அல்லது, 56161 ஆகிய எண்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்ப
வேண்டும்
உடனே, பான் கார்டும், ஆதார் கார்டும் இணைக்கப்பட்டு விடும். ஆனால், பான்
கார்டில் உள்ள பெயருக்கும், ஆதார் கார்டில் உள்ள பெயருக்கும் சிறிய
வித்தியாசம் இருந்தாலும், எஸ்.எம்.எஸ்., வசதியை பயன்படுத்த முடியாது
அவ்வாறு பெயரில் சிறிய மாற்றம் இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால்,
அருகில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு செல்ல அறிவுறுத்தி,
எஸ்.எம்.எஸ்., மூலம் பதில் அனுப்பப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...