காலையை துவங்கும் போது நாம் உண்ண விரும்பும் பெரும்பாலான உணவு என்றால் அது இட்லி அல்லது உப்புமா தான்.
ஆனால், இப்போது நிறைய பேர் மாடர்ன் உலக நடைமுறைக்கு மாறிவிட்டனர். அதனால் ஓட்ஸ் போன்ற உணவினை பால் சேர்த்து சாப்பிட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுகின்றனர். உண்மையை சொல்லப் போனால் இது ஆரோக்கியமானது அல்ல. இருப்பினும் இது ஆரோக்கியமானது தான் என்று நினைத்துக்கொண்டு தினமும் காலை உணவாக சாப்பிட்டு வருகிறார்கள்.அதனைப் அற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.ஓட்ஸ் :
இதனைப் பற்றி சற்று விரிவாக தெரிந்துக் கொண்டால் உண்மைகள் உங்களுக்கேத் தெரியும். மற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர ஓட்ஸ் எவ்வளவோ மேல் தான். ஓட்ஸ் சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்த வேண்டுமென்பதில்லை. ஓட்ஸ் கூட ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு வகை தான். இதனை பால் மற்றும் தயிர் சேர்த்து தான் சாப்பிட வேண்டும்.
சுத்தகரிக்கப்பட்ட உணவு ;
எப்படி சாப்பிட்டாலும் இது ஒரு சுத்திகரிக்கப்பட்ட உணவு. சுத்திகரிக்கப்பட்ட உணவு எதுவாக இருந்தாலும் அது ஆரோக்கியமற்றது தான். மேலும், அது மிகவும் சுத்திகரிக்கப்பட்டதாகும். இவை எவ்வாறு சுத்திகரிக்கப்பட்டதென்று முதலில் பார்க்க வேண்டும். இது முதலில் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் மாவாக அரைக்கப்பட்டு அத்துடன் வேண்டிய சுவைகளை செயற்கை சுவையூட்டி சேர்த்து தயாரிக்கப்படுகிறது
சர்க்கரை கலந்த தானியங்கள் :
செய்து வைத்திருக்கும் மாவு அதிக சூட்டில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு வேண்டிய வடிவங்களில் மாற்றி முழுவதுமாக தயாராகி விடும். எவ்வளவு நன்றாக இருந்தாலும் இதில் உள்ள சர்க்கரையே போதும் இது ஆரோக்கியமானது இல்லை என்பதை சொல்வதற்கு. இது உடலில் சர்க்கரை அளவைக் கூட்டச் செய்யும்.
கூடுதல் சர்க்கரை :
இதில் இருக்கும் சர்க்கரை போதாது என்பதற்கு கூடுதல் சர்க்கரை சேர்க்கும் பழக்கம் அனைவருக்குமே தெரியும். இது கூடுதலாக பிரச்சனைகளை தான் உண்டு செய்யும்.
உண்மையில் முழு தானியமா?
அனைத்து வகையான ஓட்ஸ் மற்றும் கார்ன் ஃப்ளாக்ஸ் பிரான்டிலும் ஹோல் க்ரைன் என்று போட்டிருக்கும். ஆனால் அவை உண்மையிலேயே முழுவதுமாக தானியம் தானா என்று பார்த்தால் இல்லை என்பது தான் பதில். முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட தானியத்தில் எப்படி முழு தானியமும் இருக்கும்? யோசிக்க வேண்டிய விஷயம் இது.
புதிதான உணவுகள் :
எது எப்படியோ. எப்பவும் வீட்டில் ஃப்ரெஷாக செய்யபப்டும் இட்லி மாவிற்கு இணை எதுவுமில்லை. அவ்ற்றில் கிடைக்கும் சத்துக்கள் வேறெதிலுமில்லை. அதுதான் நம் பாரம்பரியத்தின் ஸ்பெஷல். ஆகவே எளிது, நேரன் குறைவு என்று பதபப்டுத்தப்பட்ட உணவிற்கு பலியாகாதீர்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...