அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வேறு மணி நேரத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பூமியின் மொத்த பரப்பு அட்சரேகைகள் (Latitudes), தீர்க்க ரேகைகள் (Longitudes ) மூலம் பிரிக்கப்படுகிறது. இந்த தீர்க்க ரேகைகளை வைத்தே ஒரு இடத்தின் நேரம் தீர்மானிக்கப்படுகிறது. கிரீன்வீச் மீன் டைம்(GMT) 12 ஆக இருந்தால் டெல்லியில் நேரம் 5.30 மணி.
இந்தியாவை பொருத்தமட்டில் வட கிழக்கு மாநிலங்களில் ஒரு தீர்க்க ரேகையும், டெல்லிக்கு பிறகு இருக்கும் மாநிலங்களுக்கு ஒரு தீர்க்க ரேகையும் இருப்பதாக அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். இதனால் ஒரே மணி நேரமாக இருப்பதால் சூரிய உதயத்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே பெறும் வடகிழக்கு மாநில மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
பூமியின் பரப்பில் குறுக்கும், நெடுக்குமாக கற்பனைக் கோடுகள் வரையப்படுகின்றன. பூமியை குறுக்காக பிரிக்கும் கோடுகள் அட்சரேகைகள் (Latitudes) எனப்படுகின்றன. பூமியை நீளவாக்கில் பிரிக்கும் கோடுகள் தீர்க்க ரேகைகள் (Longitudes ) எனப்படுகின்றன. இந்த தீர்க்க ரேகைகளை வைத்தே ஒரு இடத்தின் நேரம் தீர்மானிக்கப்படுகிறது.
கிரீன்வீச் மீன் டைம் 12 ஆக இருந்தால் டெல்லியில் நேரம் 5.30 மணி. ஆனால், இந்தியாவில் இரு தீர்க்க ரேகைகள் செல்கின்றன. இதன்படி வட கிழக்கு மாநிலங்களின் நேரம் டெல்லியை விட 1 மணி நேரம் அதிகமாக இருக்க வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்கள் கூறும் காரணங்களை அறிவியல் ரீதியாக அணுகாமல் டெல்லியில் 5 மணி என்றால் அஸ்ஸாமிலும் 5 மணி தான் என்று அர்த்தமில்லாத வாதம் பேசி அதையே வட கிழக்கு மக்களின் தலையிலும் அரசு கட்டியது. டெல்லியில் சூரிய உதயம் ஆவதற்கு முன்பே அஸ்ஸாமில் சூரிய உதயம் ஆகிவிடுகிறது. அங்கு சூரிய அஸ்தமானம் ஆகி ஒரு மணி நேரத்துக்குப் பின்பே டெல்லியில் சூரிய அஸ்தமானம் நடக்கிறது.
அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே சூரிய வெளிச்சம் வந்து மாலை 5 மணிக்கே பொழுது முடிந்துவிடுகிறது. ஆனால் தற்போது இந்தியாவின் பிறபகுதிகளில் இருப்பதைப் போல அதாவது காலை 9 மணி
அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் இந்திய மணி நேரம் நடைமுறைப்படுத்துவதால் பகல் நேர வேலை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் பணி மற்றும் உற்பத்தித் திறன் குறைகிறது என்பது அவர்களின் ஆதங்கமாக உள்ளது.
எனவே அவர்களின் பூமி ரேகைக்கு ஏற்றாற் போல நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆய்வு அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநில முதல்வர் பீமா காண்ட்டும் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
வடகிழக்கு மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆய்வுகளை நடத்தி வருவதாக அந்தத் துறையின் செயலாளர் அஷூடோஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை அறிவியல் ரீதியிலான ஆதாரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
நேரம் மாற்றி அமைக்கப்பட்டால் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் காலை 6 அல்லது 7 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை வேலை நேரம் இருக்கும். ஆக இந்தியாவின் இதர பகுதிகளில் ஒரு நேர முறையும் வடகிழக்கில் ஒரு நேர முறையும் கடைபிடிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...