Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்வது எப்படி? புதிய விதிகள் சொல்வதென்ன? முழு விவரம்

பத்திரப் பதிவுத்தடை விவகாரம் 

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப் பதிவு செய்வதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப்பதிவு செய்யவும், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தடை விதித்தது.


இதை எதிர்த்து மனை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வீட்டு மனைகள் பத்திரப் பதிவு தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் தமிழக அரசு சந்தேகங்களை எழுப்பியது. அதற்குப் பதிலளித்த உயர்நீதிமன்றம், '20-10-2016 ஆம் ஆண்டுக்குமுன் பத்திரப் பதிவு செய்த மனைகள் மறு பதிவு செய்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த கட்டணங்களை செலுத்தி மனைகள் கட்டிக்கொள்ளலாம். பத்திரப் பதிவுத் தடை அமலிலிருந்த காலத்தில் பதிவு செய்த வீட்டுமனைகள் செல்லாது' என்றும் விளக்கமளித்தது.

இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட பலரும் வேண்டிக் கொண்டதற்கிணங்க தற்காலிகத் தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் தலைமையிலான முதன்மை அமர்வு, வீட்டு மனைகளாகப் பதிவு செய்யப்பட்ட மனைகளை மீண்டும் பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்தத் தடையை கடந்த மார்ச் மாதத்தில் நீக்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க பல ஆயிரம் வீட்டுமனைகள் விறுவிறுப்பாக மறுவிற்பனையாகத் தொடங்கின.

அடுத்து பதவியேற்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, இந்தத் தடையை மீண்டும் கொண்டுவந்து, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை எதிர்பாராத தமிழக அரசாங்கம் வேறு வழி இல்லாமல் அடுத்த ஒரு சில தினங்களில், அரசு அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகள் மற்றும் தனிமனைகளை வரைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை 4.5.2017 அன்று வெளியிட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை அடுத்து முதன்மை அமர்வு 12.5.2017 அன்று அரசின் வரன்முறைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, நகரமைப்பு விதிகள் மற்றும் புதிய வரன்முறை விதிகளின்படி, பதிவுச் சட்டம் பிரிவு 22ஏ-யையும் அதன் சலுகையையும் செயல்படுத்துமாறு இடைக்காலத் தீர்ப்பு ஒன்றினை வழங்கியது.

விதிகள் சொல்வதென்ன!

தமிழ்நாடு அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் ஒழுங்கு முறை விதி -2017 (Tamil Nadu Regularisation of Unapproved Layouts and Plots Rules, 2017.)

விதி 1 தமிழ்நாடு அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் (ம) மனைகளை முறைப்படுத்தும் விதி

விதி 2 வரையறைகள்

1. நகர் ஊரமைப்பு சட்டம் 1971 (தமிழ்நாடு சட்டம் 1922 பிரிவு 35)

2. i) முறைப்படுத்தும் அதிகாரிகள் (மனைகள், மனைப்பிரிவுகள் (மற்றும்) மனை உட்பிரிவுகள்)

a) ஆணையாளர், மாநகராட்சிகள் b) ஆணையாளர், நகராட்சிகள் c) செயல் அலுவலர், பேரூராட்சிகள் d) வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றியம்

ii) மனைப்பிரிவுகளை முறைப்படுத்துதல்

a)உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMAD) b)உறுப்பினர் செயலர், உள்ளூர் திட்டக்குழுமம், பல்கலைநகர் புதுநகர் வளர்ச்சிக் குழுமம். மண்டல துணை இயக்குநர்/உதவி இயக்குநர். நகர் ஊரமைப்பு துறை

3. வளர்ச்சிக் கட்டணம் விதி எண் 10-ல் கண்டுள்ளவாறு வளர்ச்சிக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

4. வளர்ச்சி கட்டுப்பாட்டு வரையறைகள் வரையறைகளின்படி முறைப்படுத்துதல்

5. வளர்ச்சித் திட்டங்கள், முழுமைத் திட்டம், மண்டலத் திட்டம், புதுநகர் வளர்ச்சித் திட்டம், விரிவு அபிவிருத்தி திட்டம், நகரமைப்பு திட்டம்,

6. வளர்ச்சி வரையறுகள் சென்னை (CMDA Area)

7. வழிகாட்டும் மதிப்பீடு

31.3.2012 வரை பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு 1.8.2007-ல் பதிவுத் துறையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டும் மதிப்பீடு வசூலிக்கப்பட வேண்டும். 1.4.2012-க்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு, இவ்விபரங்களை அரசிதழில் வெளியிடப்பட்ட 04.05.2017 அன்று பதிவுத்துறையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டு மதிப்பீட்டின்படி வசூலிக்கப்பட வேண்டும். மனைப்பிரிவில் விற்பனை செய்யப்படாத மனைகளுக்கு இத்துறையில் மனைப்பிரிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் நாளைய வழிகாட்டும் மதிப்பினை வசூலிக்கப்பட வேண்டும்.

8. மனைப்பிரிவு (Layout)

8. (i). 8 மனைகளுக்கு கூடுதலாக பிரிக்கப்படும் மனைகள் CMDA Area

(ii). புதிய சாலைகள், தெருக்கள் அமைத்து மனைகளாக பிரிக்கப்பட்டிருப்பின் -

உள்ளூர் திட்டக் குழுமம்/ மண்டல நகர் ஊரமைப்பு பகுதி

9. மனைப்பிரிவு கட்டமைப்பு (Layout framework)

மனையிடத்தில் அமைக்கப்பட்டுள்ளவாறு ஏற்கனவே அமையப்பெற்ற மனைப்பிரிவில் தேவையான மாற்றங்களை செய்து மேம்படுத்துதல் (விதி 5(4) ன் படி)

10 மனைப்பிரிவு உரிமையாளர் - மனைப்பிரிவின் உரிமையாளர் (Layout Promoter) - அதிகாரம் பெற்றவர் - கூட்டுறவு பதிவாளர் (ம) மனைப்பிரிவு உரிமையாளர் சங்கம்

11. உள்ளூர் நிர்வாகம் (Local Authority) அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி

12. 02.01.02016-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் படி மனையிடத்தின் உரிமையாளர் (Plot holder)

13. மனை அல்லது அனுமதியற்ற மனை, அனுமதியற்ற மனைப்பிரிவில் அமையும் உட்பிரிவுகள்

14. முறைப்படுத்துவதற்குரிய கட்டணம்(Regularisation charge) விதி 9-ன் படி அனுமதியற்ற மனை (அ) அனுமதியற்ற உட்பிரிவுகளை முறைப்படுத்துவதற்கு உரிய கட்டணம் வசூல் செய்தல்

15. அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்துதல் (Regularisation of unapproved layout)

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்தினாலும் மனைப்பிரிவில் உள்ள ஒவ்வொரு மனைகளும் முறைப்படுத்தப்பட்டதாக கருத இயலாது. அனுமதியற்ற மனைப் பிரிவுகளை முறைப்படுத்திய பின்னர் அதிலுள்ள ஒவ்வொரு மனைகளும் முறைப்படுத்தப்படல் வேண்டும்.

16. மனை உட்பிரிவு(Sub-division )

i. ஒரு நிலத்தினை 8 மனைகள் வரை உட்பிரிவு செய்தல் -CMDA Area ii. புதிய சாலைகள் ஏதும் ஏற்படுத்தாமல் நிலையிலுள்ள சாலையின் மீது அமையும் நிலத்தினை மனைப்பிரிவுகளாக உட்பிரிவு செய்தல் -DTCP Area

17. அனுமதியற்ற மனைப்பிரிவு அல்லது மனை உட்பிரிவுகள்(Unapproved layout or sub-division)

நகர் ஊரமைப்பு துறையில் முன் ஒப்புதல் பெறப்படாமல் பிரிக்கப்பட்ட மனைகள் (ம) மனை உட்பிரிவுகள்

18. விடுபட்ட வெளிப்பாடுகள் அனைத்தும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971-ல் (தமிழ்நாடு சட்டம் 1972 பிரிவு 35) Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972) அமையும் வெளிப்பாடுகள்.

விதி 3. அனுமதியற்ற மனைப்பிரிவினை முறைப்படுத்துவதற்கான காலக்கெடு (Cut-off date for considering regularisation of unapproved plots and layouts)

2.01.02016-க்கு முன்னர் மனைகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதே போல் 2.01.016 அல்லது அதற்கு முன்னர் பதிவுத் துறையின் வழியாக விற்கப்பட்ட (ம) விற்கப்படாத மனைகள் அனைத்தும் (ம) உட்பிரிவு செய்யப்பட்ட மனைகள் அனைத்தும் முறைப்படுத்துவதற்கு தகுதியானதாகும். அதற்கு மனையின் உரிமையாளர் அல்லது ஒப்பந்தகாரர் மனையிடத்திற்கான விற்பனை பத்திரம் அல்லது title பத்திரம் தேவைப்படும். பொது அதிகாரம் (ம) ஒப்பந்த பத்திரம் மனை விற்பனை செய்வதற்கு அத்தாட்சியாக எடுத்துக் கொள்ள இயலாது.

விதி 4. அனுமதியற்ற மனை (ம) மனைப்பிரிவுகளை முறைப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் (Restrictions for regularization of unapproved plots and layouts)

i. நீர்நிலைகள் மீது (வாய்க்கால், தொட்டி, ஏரி, குளம், ஆறு) ஆகியவற்றின் மீது அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகள்

ii. அரசு புறம்போக்கு நிலத்தின் மீது அமையப்பட்டுள்ள மனைப்பிரிவுகள்

iii. திறந்த வெளி ஒதுக்கீடு இடங்கள் (Open space reservation(OSR), பூங்கா, விளையாடுமிடங்கள் அமையப்பெற்ற மனைப்பிரிவுகள், அனுமதி பெறப்பட்ட மனைப்பிரிவில் திறந்த வெளி ஒதுக்கீடு இடங்கள், பூங்கா, விளையாடுமிடங்கள் ஒதுக்கீடுகளில் பிரிக்கப்பட்ட மனைகள்

iv. அடுத்த நிலத்திற்கு வழியாக அமையும் காலிமனை (Vacant Plot)

v. உத்தேச சாலை மீது அமையப்பெற்ற மனைகள். rail corridors (ம) தெருக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அமையும் மனைகள்

vi. பொதுப்பாதை (ம) தெருக்களை ஆக்கிரமிப்பு செய்து பிரிக்கப்பட்ட மனைகள் நில உச்ச வரம்பு சட்டம் 1978 பிரிவு 24-ன் படி உள்ள மனையிடம்

vii. அதிக உயர் அழுத்தம் மின் பாதைக்கு கீழ் பிரிக்கப்பட்ட மனைகள்

விதி 5. முறைப்படுத்துவதற்கான கட்டாய விண்ணப்பம் (Compulsory application for regularization)

i. மனைகளை முறைப்படுத்துவதற்கு உரிய அலுவலருக்கு விதி 3-ன் படி கணினியில் இணையதளம் வழியாக படிவம் 1 உரிய இணைப்புகளுடன் விண்ணப்பம் ஒவ்வொரு மனை உரிமையாளர் மற்றும் மனைப்பிரிவு விற்பனையாளர் செய்ய வேண்டும். உரிய அலுவலர் விண்ணப்பத்தினை பரிசீலினை செய்து உரிய ஆணை பிறப்பிப்பார்.

Lay out frame work முறைப்படுத்தப்பட்ட பின்னரே அதிலுள்ள தனித்தனி மனைகள் முறைப்படுத்த இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனித்தனி மனை உரிமையாளர் முறைப்படுத்துவதற்கு மனைப்பிரிவின் வரைபடத்துடன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ii முறைப்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பத்தினை மனைப்பிரிவு உரிமையாளர்கள் பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கம், 3-ல் 2 பங்கு விற்பனையாகி இருந்தால் மனைப்பிரிவு உரிமையாளர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

iii அனுமதியற்ற மனைப்பிரிவை முறைப்படுத்துவதற்கு இந்த அறிக்கை (notification) ஆன தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் விதி 2(2)ii-ன்படி உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு, விதி 2(2) ii-ன் படி அனுமதியற்ற மனைப்பிரிவு அமையப்பெற்ற கிராமம், சர்வே எண் அல்லது வார்டு எண், ந.அ.எண், உள்ளாட்சி பெயர் ஆகியவற்றினை குறிப்பிடுதல் வேண்டும்.

iv. சம்பந்தப்பட்ட அலுவலர் விதி 2(2) ii-ன்படி தன்னிச்சையாக (suo-motu) தயாரித்து ஏற்கனவே நிலையிலுள்ள மனைப்பிரிவிற்கு அனுமதி வழங்க லைசன்ஸ் சர்வேயர் மூலம் விதி 2(2) i-ன் படி விபரங்கள் எடுக்க வேண்டும் மற்றும் முறைப்படுத்தாத மனைப்பிரிவுகளும் கண்டறியப்பட வேண்டும்.

v மனைப்பிரிவு விற்பனையாளர் - பதிவு பெற்ற கூட்டுறவு சமுதாயம் – சங்கம் மனைப்பிரிவை முறைப்படுத்துவதற்கு சேர்ந்தே விண்ணப்பம் செய்ய வேண்டும் மற்றும் உரிய அலுவலரின் ஆணைப்படி பல வழிகளில் முறைப்படுத்தாத மனைப்பிரிவிற்கான விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் மற்றும் தேவையான கட்டணம் விதிகளில் குறிப்பிட்டபடி செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

vi விதி 2(2)i-ன்படி உரிய அலுவலரால் அனுமதியற்ற மனைப்பிரிவு மனைகள் முறைப்படுத்துவதற்கு விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

vii விதி 2(2) ii-ன் படி அனுமதியற்ற மனைப்பிரிவு முறைப்படுத்துவதற்கு விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

viii நில உரிமையாளர்கள் அல்லாதவர்களால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.

iv விண்ணப்பம் கீழ்கண்ட இணைப்புகளை கொண்டிருக்க வேண்டும்.

a) உட்பிரிவு அல்லது மனைப்பிரிவில் உள்ள அனுமதியற்ற தனித்தனி மனைகளை முறைப்படுத்துவதற்கான இணைப்புகள் பட்டா அல்லது புலவரைபடத்தின்படி

i) எல்லை அளவுகள் குறிப்பிடப்பட்ட மனை அல்லது உட்பிரிவு காட்டப்பட்ட இடஅமைப்பு வரைபடத்தின்படி 3 நகல்கள் மற்றும் சாலையின் அகலம் குறித்து வரைபடத்தில் மனுதாரரால் சுயகையொப்பம் இடப்பட்டும் லைசன்ஸ் சர்வேயர் அல்லது அது சம்பந்தமான சட்டத்தில் அல்லது கட்டிட விதியின்படி சான்றொப்பம் பெறப்பட்ட வரைபடத்தின் நகல்.

ii. உத்தேச மனை இடம் பெற்ற மனைப்பிரிவு வரைபடத்தில் மனையின் அளவுகள், சாலையின் அமைப்பு, சாலையின் அகலம், பொது திறவிட இடத்தின் அளவுகள் மற்றும் பொது உபயோக மனை ஆகியவையும் சர்வே எண்களும் கிராமம் குறிப்பிடப்பட்டு பெறப்பட வேண்டும்.

iii. மனைப்பிரிவு குறிப்பிடப்பட்டு அதை சுற்றி பொது உபயோக சாலையை இணைக்கும் பாதையையும் சுற்றியுள்ள அபிவிருத்திகள் குறிப்பிட்டு சுற்றுச்சார்பு வரைபடம் பெறப்பட வேண்டும்.

iv. மனையிடத்தின் சுயசான்றொப்பமிட்ட கிரைய பத்திரம் அல்லது டைட்டில் பத்திரத்தின் நகல்.

v. பட்டா. PLR (or) TSLR ஆகியவை மனுதாரர் பெயரில் பெறப்பட்டதன் நகல் மேற்கண்டவை மனுதாரர் பெயரில் இல்லையென்றால் முந்தைய உரிமையாளர்களின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

vi. விண்ணப்பம் செய்யப்படும் நாள் முன் ஒருவார காலத்திற்கு முன் வரை சார்பதிவாளர் துறையில் வில்லங்க சான்று பெறப்பட வேண்டும்.

vii. உத்தேச மனையிடம் விவசாயப் பகுதிக்குள் அமைந்தால் சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நீர்வழிப்போக்குவரத்து. வெள்ளப்பாதிப்பு குறித்து சான்று பெறப்பட வேண்டும்.

a) அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் ஒழுங்கு முறைபடுத்துதல் (For regularisation of unapproved layout )

i. விற்பனை செய்யப்பட்ட மனைகள் விபரத்துடன் மனைப்பிரிவு வரைபடம் தயாரித்து 5 நகல்கள்

ii. 500 மீட்டர் சுற்றளவிற்குள் அணுகுசாலை விபரம் மற்றும் அபிவிருத்திகள் குறிப்பிட்டு பெறப்பட வேண்டும்.

iii. வில்லங்க சான்று - மனைப்பிரிவு பிரிக்கப்பட்டு விற்பனை செய்த நாளிலிருந்து விண்ணப்பம் செய்யப்படும் ஒருவார காலத்திற்கு முன்வரை பெறப்பட வேண்டும்.

iv. மனைப்பிரிவு அமையவுள்ள, சுய சான்றிட்ட உரிமையாளர் பெயரிலுள்ள நில உடைமை ஆவண நகல்

v. சமீபத்திய நிரந்தர நில உடைமை பதிவேடு Permanent Land Records (PLR)நகர நில அளவை பதிவேடு or Town Survey Land Records (TSLR) மற்றும் புலச்சுவடி Field Measurement Book (FMB)

c) நில உச்ச வரம்பு சட்டம். நில சீர்திருத்த சட்டத்தின்படி படிவம் -II நிரப்பப்பட்டு பெறப்பட வேண்டும்.

d) மனைப்பிரிவு விற்பனை உரிமையாளர் - சமுதாயம் - சங்கம் ரூ.20- முத்திரைத் தாளில் படிவம் III-ல் உரிய கட்டணம் செலுத்துவேன் என்றும் திருத்தம் (Rectification)

வேலை செய்ய வேண்டும் என உறுதிமொழி பத்திரம்.

விதி 6. விண்ணப்பம் கீழ்க்கண்ட விபரங்களை நிறைவு செய்தல் வேண்டும். An application under these rules shall be in conformity with the following, namely

1) விமானச் சட்டம், 1934 (Aircraft Act, 1934 ) இன் படி சுற்றுலா மற்றும் விமான அமைச்சக, போக்குவரத்து வரையறைகளை நிறைவு செய்யும் ஒழுங்குமுறைகள்

2) பாதுகாப்புச் சட்டம், 1903 இன் படி பாதுகாப்பு அமைச்சக ஒழுங்குமுறைப்படி, விமானப்படை 100 மீட்டர் சுற்றளவிற்குள் நிறைவு

3) சுற்றுச் சூழல் சட்டம், 1986(Environment (Protection) Act, 1986 ) –இன் படி கடற்கரையோர மண்டலங்கள் அறிவிப்பு

4) நகராட்சி கட்டிட விதிகள், 1993-ஐ நிறைவு செய்ய வேண்டும். (The Tamil Nadu District Municipalities (Hill Stations) Building Rules, 1993)

5) Annexure-XI ன் படி CMDA Area-வில் வரக்கூடாது.

6) Annexure-XIX ன் படி Red Hills Catchment Area வில் வரக்கூடாது

7) Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1959 மற்றும் Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 தொல்லியல் பகுதியில் வரக்கூடாது

விதி 7. முறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் (Guidelines for regularization)

a) முறைப்படுத்துவதற்கான மனை அல்லது உட்பிரிவு நிலமானது 2.01.02016 முன்னர் விற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

b) அனுமதியற்ற மனைப்பிரிவு முறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக அமையும் மனைகளாக இருக்க வேண்டும்.

c) எந்தவொரு மனையும் முறைப்படுத்துவதற்கு பொது அணுகுசாலை அல்லது பொதுப்பாதை மூலம் அணுகுசாலை அமையுமாயின் அப்பாதையானது மனுதாரருக்கு உரிமை உள்ளதாக இருக்க வேண்டும்.

d) அணுகுசாலையிலிருந்து மனைப்பிரிவிற்கு வரும் பாதையின் அகலம் மாநகராட்சியாக மற்றும் நகராட்சியாக இருந்தால் 4.8 மீட்டர் அகலமும் பேரூராட்சி மற்றும் ஊராட்சியாக இருந்தால் 3.6 மீட்டர் ஆக இருக்கலாம்.

e) தனித்த மனைகளாக இருந்தால் (In case of individual plot )

i. அனைத்து மனைகளும் approval of layout frame work –ன் படி உரிய அலுவலரால் விதி 2(2)iii-ன்படி முறைப்படுத்தலாம்.

ii. தனித்த மனைகளின் உட்பிரிவு கட்டிடத்தில் விதி பாதிப்புகள் இருந்தாலும் முறைப்படுத்தலாம்.

iii. மனைப்பிரிவில் உள்ள தனித்த மனைகள் இத்துறையால் ஒப்புதல் அளிக்கப்படும் (layout frame work) மனைகளின் அளவுகள் மற்றும் அணுகுசாலையை நிறைவு செய்யும் வகையில் அமைதல் வேண்டும்.

iv. உரிய அலுவலரின் அறிவுறுத்தலின்படி சாலையை கலப்படுத்துவதற்கு குறிப்பிட்ட மனையிடத்தை உள்ளாட்சிக்கு தானம் செய்ய வேண்டியிருந்தால் அது தானப்பத்திரத்தின்படி உள்ளாட்சிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

f) மனைப்பிரிவில் உள்ள மனையில் 1/3 க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டிருந்தால்

i. மனைப்பிரிவு அணுகுசாலை நீங்கலாக ஏனைய வளர்ச்சி ஒழுங்குமுறை அல்லது வளர்ச்சி கட்டுப்பாடு ஒழுங்குமுறை (Development Regulations or Development Control Regulations)-ஐ நிறைவு செய்ய வேண்டும் மற்றும் மனைகளின் நில உபயோகம் பெறப்படல் வேண்டும். விவசாய உபயோகத்திலிருந்து மற்றொரு உபயோகத்திற்கு மாற்றம் செய்வதாக இருந்தால் மாற்றலாம்.

g) மனைப்பிரிவில் உள்ள மனைகள் 1/3 க்கு மேல் 2/3 ற்குள் விற்பனை செய்திருந்தால்

i) வளர்ச்சி ஒழுங்குமுறை அல்லது வளர்ச்சி கட்டுப்பாடு ஒழுங்குமுறை -ன் படி இருக்க வேண்டும். சாலையின் அகலம், மனையின் உபயோகத்திற்கு விதிவிலக்கு உண்டு.

ii) மனைப்பிரிவில் விற்பனையாகாத மனைகளில், விற்பனையை மேம்படுத்தும் வகையில் அங்கிகரிக்கப்படலாம்.

iii) மனைப்பிரிவு முழுதும் விவசாய நிலத்தில் அமைந்திருந்தால் , உரிய அலுவலர் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, தடுத்தல், அகற்றல் போன்றவற்றால் எவ்வளவு மூழ்கடித்தலை (level of inundation) என்பதை கணக்கில் கொள்ளவேண்டும்.

iv) மனைப்பிரிவில் விற்பனையாகாத மனைகள், இருக்கும் பட்சத்தில், மனை உரிமையாளர் மேல் நிலை நீர்த்தொட்டி, மின்மாற்றி ஆகியவற்றுக்கு இடத்தை உள்ளாட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.

விதி 8. முறைப்படுத்துவதின் நோக்கம் Effect of regularization

மேற்கண்ட விதிகளின்படி முறைப்படுத்துப்படும் மனைகள் குடியிருப்பு உபயோகத்திற்கு மட்டுமே முறைப்படுத்தப்படும்

விதி 9. முறைப்படுத்துவதற்கான கட்டணம் Regularisation Charge

மனை (ம) மனைப்பிரிவுகள் முறைப்படுத்துவதற்கு கீழ்கண்டவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

i) மாநகராட்சி ரூ 100 / 1 ச.மீ ii) நகராட்சி ரூ 60 / 1 ச.மீ iii) பேரூராட்சி (ம) கிராம ஊராட்சி ரூ 30 – ச.மீ மேற்கண்ட அனைத்து கட்டணங்களும் அரசாங்க கணக்கில் வரவு வைக்கப்படும்.

விதி 1.0 வளர்ச்சி கட்டணம் வசூல் செய்தல் Levy of Development Charge

மனை (அ) மனைப்பிரிவு முறைப்படுத்துவதற்கு வளர்ச்சி கட்டணம் கீழ்கண்டவாறு வசூல் செய்யப்படும்

a) மாநகராட்சி ரு் 600 - 1 ச.மீ b) சிறப்பு நகராட்சி ரு் 350 – 1 ச.மீ c) நிலை-1 (ம) நிலை-2 நகராட்சி ரு் 250 . 1 ச.மீ d) பேரூராட்சி ரு் 150 – 1 ச.மீ e) கிராம ஊராட்சி ரு் 100 – 1 ச.மீ

மேற்கண்ட வளர்ச்சி கட்டணம் உள்ளாட்சி கணக்கில் வசூலிக்கப்படும்.

விதி 11. திறவெளி ஒதுக்கீட்டிற்கான கட்டணம் Charges for Open space reservation (OSR) Area

1. உட்பிரிவில் உள்ள மனையை முறைப்படுத்துவதற்கு வளர்ச்சி கட்டுப்பாடு வரையறைகளின் படி திறவெளி ஒதுக்கீடு கணக்கீடு செய்து அதற்கு இணையான கட்டணம் வசூல் செய்யப்படும்.

2. மனைப்பிரிவுகளை முறைப்படுத்துவதற்கு 10 % திறவெளி ஒதுக்கீடு இல்லையென்றால் Clause-7 விதி 2-ன் படி வழிகாட்டு மதிப்பீட்டின்படி திறவெளி ஒதுக்கீடு பரப்பளவிற்கு வழிகாட்டு மதிப்பீட்டின்படி கட்டணம் வசூலிக்கப்படும். 10% திறவெளி ஒதுக்கீட்டிற்கான மனை இருப்பின் அதனை மனைப்பிரிவின் பரப்பளவிலிருந்து கழித்து மேற்கண்டவாறு OSR பரப்பளவு மற்றும் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்

3. திறவெளி ஒதுக்கீட்டிற்கான கட்டணம் உரிய அலுவலரின் கணக்கில் விதி 1(2)ii-ன்படி நிலையிலுள்ள வழிகளின்படி வரவு வைக்கப்படும்.

விதி 12. கூராய்வு கட்டணம் Scrutiny fees

கூராய்வு கட்டணம் மனைக்கு 500 வீதம் உரிய அலுவலரால் விதி(2) ii-ன்படி வசூல் செய்யப்படுகிறது.

விதி 13. சந்தேகங்களை நீக்குதல்

முறைப்படுத்துவதற்கான கட்டணங்கள் நீங்கலாக ஏனைய மேற்படி கட்டணங்கள் ஏதும் வசூலித்தல் கூடாது

விதி 14. விண்ணப்பங்களின் பரிசீலனை

1. உட்பிரிவில் உள்ள மனைகளை முறைப்படுத்துவதற்கு உரிய அலுவலர் விதி 2(2)i-ன்படி முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, நேராய்வு அணுகுசாலையின் நிலையை உறுதி செய்தும் கூடுதல் விவரங்கள் தேவைப்படின் அதனைப் பெற்றும் முறைப்படுத்தலாம். மனையை முறைப்படுத்துவதற்கு முன் உரிய அலுவலர் மனையான உட்பிரிவில் உள்ளதென்றும் மனைப்பிரிவில் இல்லையென்றும் சான்றளிக்க வேண்டும்.

மனையானது முறைப்படுத்துவதற்கு ஏதுவாக இருந்தால் முறைப்படுத்துவதற்கான கட்டணம் வளர்ச்சி கட்டணம் (ம) திறவெளி ஒதுக்கீட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்கான கேட்பு வரைவு அனுப்ப வேண்டும். கட்டணங்கள் செலுத்தியதற்கான ரசீது பெறப்பட்ட பின்னர் உரிய அலுவலரால் மனைக்கான வரைபடம் முறைப்படுத்தப்படும்.

2. விதி 2(2)i-ன் படி principle approval of layout framework ஒப்புதல் பெற்ற பின்னரே தனித்தனி மனைகள் உரிய அலுவலரால் விதி 2(2)ii-ன் படி முறைப்படுத்த இயலும்.

3. விதி 2(2) ii-ன்படி உரிய அலுவலர் மேற்கண்ட விதிகளின் படி நேராய்வு செய்து ஏதாவது கூடுதல் விபரங்கள் தேவைப்படின் அதனை பெற்று principle approval of layout framework தயார் செய்ய வேண்டும். அலுவலர் கூடுதல் விபரங்கள் விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் பெறவில்லையெனில் விண்ணப்பம் திருப்பப்படும்.

4. விதி 2(2) ii-ன்படி மனைப்பிரிவில் உரிய அலுவலரால் திருத்தம் செய்யப்படின் அலுவலரை நிறைவு செய்யும் வகையில் அதாவது திறவெளி ஒதுக்கீடான மனையிடம் (ம) சாலையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு சமர்ப்பிக்கும் முறையையும் சேர்த்ததாகும்

5. விதி 2(2)ii-ன்படி உரிய அலுவலர்களால் அறிவுறுத்தியபடி மனைப்பிரிவை திருத்தம் செய்து சாலைகள் மற்றும் OSR ஒப்படைப்பு செய்த பின்னரே principle approval of layout framework -ற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

6. In principle approval of layout framework பெற்ற பிறகு உரிய அலுவலரிடம் தனித்தனி மனைகள் முறைப்படுத்துவதற்கு மனையின் அளவு (ம) சாலையின் அகலம் (ம) முறைப்படுத்துவதற்கான கட்டணங்களில் பெற்ற பிறகு முறைப்படுத்த வேண்டும்.

7. உரிய கட்டணம் பெற்றபிறகு விதி2(2) i-ன்படி உரிய அலுவலரால் வரைபடத்தில் உள்ள தனித்தனி மனைகள் முறைப்படுத்த முடியும்

8. ய) விதி 5(4)-ன் படி மனைப்பிரிவு தன்னிச்சையாக அலுவலரால் விதி 2(2) )ii-ன்படி அலுவலரால் விதி 2(2)ii-ன்படி நேராய்வு செய்து வழிகாட்டு விதி 7 (ம) விதி 7-ன் படி உரிய கட்டணங்கள் அதாவது கூராய்வு கட்டணம். முறைப்படுத்துவதற்கான கட்டணம் வளர்ச்சி கட்டணம். திறவெறி கட்டணம் மனைப்பிரிவை மேம்படுத்துவதற்கான கட்டணம் ஆகியவை மனைப்பிரிவின் மனை உரிமையாளரிடம் விகிதப் சார்பு (pro-rata ) அளவில் கணக்கீடு செய்து வசூலிக்க வேண்டும்.

b) விதி 2(2)ii-ன்படி மனைப்பிரிவில் திருத்தம் மேற்கொண்டு principle approval of layout framework -ற்கு அனுமதி வழங்க இயலும். அதனை தொடர்ந்து விதி 2(2)i-ன்படி உரிய கட்டணங்கள் மனை உரிமையாளரிடம் பெறுவதற்கு உரிய அலுவலருக்கு விதி 2(2)i-ன்படி மேலனுப்பப்படும்.

c) principle approval of layout framework -ன்படி உரிய கட்டணங்கள் பெறப்பட்ட பின்னர் விதி எண் 2(2) i-ன்படி மனையிடத்தின் உரிமையாளரின் உரிமையை உறுதி செய்து மனையை முறைப்படுத்துவதற்கான ஆணையை பிறப்பிக்க வேண்டும். மேலும் அலுவலர் மனைப்பிரிவு உரிமையாளர் மேற்கண்ட மனைப்பிரிவை மேம்படுத்துவதற்கான நிபந்தனைகளை குறிப்பிட வேண்டும். உள்ளாட்சி சட்டப்படி சாலைப் பெற்று பராமரிக்க வேண்டும்.

9. அனுமதியற்ற மனைப்பிரிவின் கட்டமைப்பை(framework) முறைப்படுத்தியதால் தானாக தனித்தனி மனைகள் முறைப்படுத்தியதாக கருதுதல் கூடாது. மனைப்பிரிவு கட்டமைப்பை முறைப்படுத்தியதற்கு பிறகு மனைகளை தனியாக முறைப்படுத்த வேண்டும்.

10. முறைப்படுத்துவதற்கான அனைத்து கட்டணங்களும் கேட்பு செய்த 30 நாட்களுக்குள் பெறப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் ஆண்டுக்கு 6 % வீதம் வட்டி வசூலிக்கப்படும். மேலும் கட்டணம் 90 நாட்களுக்குள் பெறப்படவில்லை எனில் விண்ணப்பம் திருப்பப்படும்.

11. விண்ணப்பம் விதிகளில் குறிப்பிடப்பட்ட வடிவில் இல்லையெனில் அதனை திருப்பலாம்.

12. விதி 2(2) i-ன்படி principle approval of layout framework -ன்படி சாலையை (ம) திறவெளியை-ஐ தானமாக(Gift Deed) பெறுவதற்கு சம்பந்தபட்ட தாசில்தாரின் வருவாய் ஆவணங்களில் மாற்றம் செய்வதற்கு ஏதுவாக அனுப்ப வேண்டும்.

விதி 15. முறைப்படுத்தாமையை தொடர்ந்து மேற்கண்டவாறு அனுமதியற்ற மனை (ம) மனைப்பிரிவை முறைப்படுத்தவில்லை யென்றால் விளைவுகள்: Consequences of non-regularisation.–

a) கரண்ட், குடிநீர், கழிவுநீர் வடிகால் அமைப்பு துண்டிக்கப்படும்

b) மேற்கண்ட அனுமதியற்ற மனை (அ) மனைப்பிரிவு பதிவு சட்டம் 1908-ன் படி பதிவு செய்ய இயலாது.

b) எந்தவொரு கட்டிடத்திற்கும் அனுமதி வழங்க முடியாது மேற்கண்டவாறு சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதி 16. வளர்ச்சி கட்டணம் தனி கணக்கில் பராமரித்தல் Amount levied towards development charges to be kept in separate account

வளர்ச்சி கட்டணத்தை தனி கணக்கில் உள்ளாட்சி வசூல் செய்து அதனை பல தேவைகளுக்கும் கட்டிட வடிவமைப்பு (ம) வளர்ச்சி (ம) மத்திய அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்படும் (sponsored )திட்டத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதி 17. மேல்முறையீடு Appeal.

எந்தவொரு நபரும் CMDA வாக இருந்தால் மேல்முறையீடு அரசுக்கும் மற்ற பகுதியாக இருந்தால் நகர் ஊரமைப்பு இயக்ககத்துக்கும் (Directorate of Town and Country Planning) ரசீது பெறப்பட்ட 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

அரசு (அ) நகர் ஊரமைப்பு துறை 30 நாட்களுக்கு மேலானால் மேல்முறையீடை ஏற்றுக்கொள்ளலாம் (அ) ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கலாம். எதிர்வாதியின் காரணம் ஏற்றுக்கொள்ளுமாறு இருந்தால் விருப்பப்பட்டு ஏற்றுக் கொள்ளலாம்.

விதி 18. திருத்தம் Revision

எந்தவொரு நபரும் நகர் ஊரமைப்பு துறையின் ஆணையை எதிர்த்து அரசுக்கு ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் அரசுக்கு அனுப்பி புதுப்பிக்கலாம்.புதிப்பித்தலை அரசு ஏற்றுக்கொள்ளலாம் (அ) ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கலாம்.

விதி 19. மறு ஆய்வு Review

எந்தவொரு நபரும் CMDA பகுதிக்குள் அமையும் மனைக்கு வழங்கப்பட்ட அரசின் ஆணையை மறு ஆய்வு செய்ய அரசுக்கு 30 நாட்களுக்குள் அனுப்பலாம்.

அதனை அரசு ஏற்றுக்கொள்ளலாம் (அ) ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கலாம்

விதி 20 பொறுப்பாகாமை (Disclaimer)

மேற்காண் விதிகளின்படி வரன் முறைப்படுத்திய மனையில் அமையும் கட்டிடம் வரைமுறைப்படுத்தியதற்கு பொறுப்பாகாமை ஆகும் (ம) எந்தவொரு உரிமையாளரும் அதில் கட்டப்பட்ட கட்டிடத்தை அழிப்பதற்கு பிரிவு 56 (ம) 57-க் கீழ் உரிமை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதி 21. நிலையற்ற ஒதுக்கீடு (Transitory provisions)

1.அனைத்து மேல்முறையீட்டாளர் விண்ணப்பங்களும் கமிட்டி (அ) அரசாங்கத்தில் நிலுவையில் இருந்தாலும் மேற்கண்ட விதிகளின்படி முறைப்படுத்துவதற்கு மேல்முறையீட்டு விண்ணப்பங்களை உரிய அலுவலருக்கு அனுப்பலாம். அதனை மேற்கண்ட விதிகளின்படி பரிசீலிக்கப்படும்.

2. தள்ளுபடி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களின் மனுதாரர் விதிகளின் விளைவுகள் நடைமுறைக்கு வரும்முன் மேற்கண்ட விதிகளை நிறைவு செய்யும் வகையில் புதிய விண்ணப்பம் அலுவலருக்கு அனுப்பப்பட வேண்டும்
நன்றி-  தினமணி  &
C.P. சரவணன், வழக்கறிஞர் 98400 52475

References:

G.O.(Ms).No.78 Housing and Urban Development [UD4(3)] Department Dated:04.05.2017 G.O.(Ms).No.79 Housing and Urban Development [UD4(3)] Department Dated:04.05.2017 G.O.(Ms).No.85 Housing and Urban Development [UD4(3)] Department Dated:16.05.2017




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive