பிளாஸ்டிக் அரிசியை எப்படி கண்டுபிடிப்பது என்ற கவலை விடுங்கள். தற்போது அதுகுறித்த டிப்ஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது விளையும் பொருள்களில் பூச்சி மருந்துகள் தெளிக்கப்படுவதால் அரிசி,
பருப்பு, காய்கறி, பழங்கள் என அனைத்திலும் கலப்படம் அதிகரித்து வருகிறது.
இதனால் இயற்கையின் உண்மையான சத்துகள் ஏதும் கிடைப்பதில்லை.
இதனால் சிறு பிள்ளைகள் பலவீனமாக உள்ளனர். முடி நரைத்தல், பல் உடைதல், முக
சுருக்கம் உள்ளிட்டவை நம் பாட்டிகளுக்குக் கூட இருந்தது இல்லை. ஆனால் இன்றோ
எல்லாமே தலைகீழ்.
குழந்தைகள் குடிக்கும் பாலிலும் கலப்படம் செய்வதாக தமிழகத்தில்
குற்றம்சாட்டப்பட்டது. இதனால் தாய்மார்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது
தனியார் பாலில் கலப்படம் உள்ளதாக தமிழக அமைச்சரே குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் இந்தியா முழுவதும் பிளாஸ்டிக்கால் ஆன முட்டைகள் விற்கப்படுவதாக
புகார்கள் எழுந்தன. போதாகுறைக்கு பிளாஸ்டிக் அரிசி வேறு விற்பனைக்கு
வந்துள்ளதாம். இந்த அரிசியானது உத்தரகண்ட் மாநிலத்தில் ஹால்டிவானி
மாவட்டத்தில் பகிரங்கமாக விற்கப்படுகிறது.
இந்த அரிசியில் கலக்கப்படும் பிளாஸ்டிக்கானது சின்தடிக் அல்லது செமி
சின்தடிக் பொருள்களால் மனித உடலுக்கு கேடு விளைவிக்கும். இதனால் நாளமில்லா
சுரப்பி சீர்கெட்டு புற்றுநோய், பிறவி குறைப்பாடுகள், குழந்தைகள்
வளர்ச்சியில் குறைபாடு உள்ளிட்டவை ஏற்படும். இதன் மூலம் வடிக்கப்பட்ட
சாதத்தை நன்கு மசித்து உருண்டையாக உருட்டி சிறுவர்கள் விளையாடினாலும்
உடையாமல் உள்ளது.
தமிழகத்தில் இந்த பிளாஸ்டிக் அரிசிகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று
தமிழக அரசு கூறினாலும் தென்னிந்தியா முழுவதும் உண்ணப்படும் பிரதானமான
அரிசியில் கலப்படம் என்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆந்திரா,
தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள கடைக்கு பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு
வந்துள்ளது.
இந்நிலையில் மக்கள் அச்சமின்றி அரிசி உணவை சாப்பிடும் வகையில் பிளாஸ்டிக்
அரிசியை கண்டறிவது குறித்து எளிய முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த
அரிசிகள் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு
வருகிறதாம்.
1. அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட வேண்டும். போட்டவுடன் அது மிதந்தால் பிளாஸ்டிக் அரிசி. இல்லையெனில் நல்ல அரிசி.
2. சிறிது அரிசியை தீப்பட்டியால் கொளுத்தி பார்க்க வேண்டும். அப்போது பிளாஸ்டிக் வாடை வந்தால் அது பிளாஸ்டிக் அரிசியாகும்.
3. வடித்த சாதத்தை 3 அல்லது 4 நாள்கள் வைத்திருந்தும் அதில் பூஞ்சை வரவில்லை என்றால் அது பிளாஸ்டிக் அரிசி.
4. 200 டிகிரி சென்டிகிரேடில் வெப்பநிலைக்கு சூடான எண்ணெய்யை காயவைத்து
அதில் சிறிது அரிசியை போட்டால் நல்ல அரிசியாக இருந்தால் அது பொரியும்.
பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் உருகி பாத்திரத்திலேயே ஒட்டி கொள்ளும்.
5. பிளாஸ்டிக் அரிசியை வேக வைக்கும்போது மேலே வெண் படலம் போல் ஒட்டி கொள்ளும்.
6. அரிசியை நன்றாக அரைக்க வேண்டும். அப்படி செய்யும் போது வெண்மை நிறத்தில்
இருந்தால் அது நல்ல அரிசி. மஞ்சள் நிறம் படிந்தால் அது பிளாஸ்டிக் அரிசி.
SRIMAAN AND KAVIYA ONLINE COMBINED COACHING CENTRE: BRANCH TRICHY.
ReplyDeletePGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:
* PG TRB :TAMIL(QUESTION PAPER)
* PG TRB :ENGLISH(Question bank)
* PG TRB :MATHEMATICS(Question bank)
* PG TRB :PHYSICS
* PG TRB :HISTORY(QUESTION BANK)
* PG TRB :ECONOMICS(QUESTION BANK)
* PG TRB :COMMERCE(Tamil & English medium)
* PG TRB :CHEMISTRY(QUESTION BANK)
* PG TRB :ZOOLOGY(QUESTION BANK)
(English Medium)
* PG TRB :BOTANY(QUESTION BANK)
(Tamil Medium)
10% டிஸ்கவுட்டில்
மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.
Contact: 8072230063