இன்ஜினியரிங் படிப்பதில், தமிழக மாணவர் களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.
இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற் பதற்கான விண்ணப்ப பதிவு,
நேற்று முடிந்தது. அதில், இரண்டு லட்சம் இடங்களுக்கு, 1.50 லட்சம் பேர்
மட்டுமே பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட, 30 ஆயிரம் பேர் குறை வாக
பதிவு செய்துள்ளனர்; அதே நேரத்தில், கலை, அறிவியல் படிப்புகளில் சேருவோர்
எண்ணிக்கை
அதிகரித்துள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்
கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர,
மே, 1 முதல், 'ஆன் லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, நேற்று முடிந்தது. இதில்,
1.50 லட்சம் பேர், கவுன்சிலிங் கில் பங்கேற்க முன்வந்துள்ளனர். கடந்த
ஆண்டு, 1.84 லட்சம் பேர் பதிவு செய்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 30
ஆயிரம்
பேர் குறைவாக
விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம், மாணவர்களிடம் இன்ஜி., படிக்கும் ஆர்வம்
குறைந்திருப்பது தெரிய வந்துள் ளது. இன்ஜி., முடிக்கும் மாணவர்களுக்கு,
'கேம்பஸ் இன்டர்வியூ'வில் வேலை வாய்ப்பு குறைந்துள் ளது தான் இதற்கு
காரணம். ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்குறைப்பில்
இறங்கி உள்ளன.
அப்படியே வேலை கிடைத்தாலும், பி.பி.ஓ., என்ற வெளிநாட்டு நிறுவனங்களுக் கான,
'அவுட் சோர் சிங்' பணியாகத் தான் இருக்கிறது. அவற்றிலும், குறிப்பிட்ட
சிலருக்கு மட்டுமே, பல ஆண்டுகளுக்கு பணியில் நீடிக்கும் வாய்ப்பும், சம்பள
உயர்வும் கிடைக்கிறது.
மற்றவர்களுக்கு, பணியில் சேர்ந்து, சில ஆண்டுகள் ஆகிவிட்டால், சம்பளம்
குறைக்கப் படுவதுடன்,'லே ஆப்' முறையில் வெளி
யேற் றப்படுகின்றனர். அதனால், இன்ஜி., படிப் பில்ஆர்வம் குறைந்து,வணிகம்,
பொருளியல் மற்றும் ஆசிரியர் பணிக்கான கலை, அறிவி யல் படிப்புகளில்,
மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தமிழக பாடத்திட்டத்திலும், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்திலும், வணிகவியல்
பிரிவில்,அதிக மாணவர்கள் படித்ததும், இன்ஜி., மாணவர் எண்ணிக்கை குறைவதற்கு
முக்கிய காரணம் என,கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஒதுக்கீட்டில் ஆர்வம்
கடந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 97 ஆயிரம் இன்ஜி., இடங்கள், காலியாக இருந்தன.
இந்த ஆண்டு, காலியிடங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை எட்டும் என
தெரிகிறது.
கவுன்சிலிங் கில், தாங்கள் விரும்பும் கல்லுாரி யில், விரும் பும்
பாடப்பிரிவு கிடைக்காது என்பதால், பல மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட் டில்,
நேரடியாக, 'அட்மிஷன்' பெற்றுள்ளனர். பல இன்ஜி., கல்லுாரிகள், நன்கொடையை
குறைத்துக் கொண்டதும், இதற்கு முக்கிய காரணம்.
thanks for sharing.for more information : usefull site
ReplyDelete