கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவும் நீட் போன்று நுழைவுத் தேர்வு நடத்த வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டின் புள்ளிவிவரத்தின்படி 4,452 கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடம் காலியாகவுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி சுமார் 60 ஆண்டுக்காலம் கடந்த நிலையில் நீதித்துறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர யோசனைகள் எழுந்துள்ளன. சட்ட அமைச்சகம் நீட் தேர்வை போன்றே ஒரு மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையை ஆட்சேர்ப்பு குழு ஒன்றை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் அமைத்து நடத்த வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.
ஏப்ரல் 8 நடைபெற்ற கூட்டத்தில் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை குறித்த விவாதங்கள் அரசாங்கத்திற்கும், நீதித்துறையினருக்கும் இடையே நடைபெற்றது. தற்போது உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாநில சேவை ஆணையங்கள் ஆகியவற்றில் நீதித்துறை அதிகாரிகளை நியமிக்கத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தேசிய அளவிலான நீதித்துறை சேவையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு இதற்கான விவாதம் 1960 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்றது. பா.ஜ.க தலைமையிலான மத்திய பிரதேசம், அருணாசல் பிரதேசம் உட்பட்ட ஏழு மாநிலங்கள் அனைத்து இந்திய நீதித்துறை அமைப்பு உருவாவதை எதிர்கின்றனர். மாற்றொரு பா.ஜ.க ஆளும் மாநிலமான மகாராஷ்டிரா அனைத்து இந்திய நீதித்துறை சேவைக்கும் சட்ட அமைச்சகம் ஒன்று எந்த ஒரு சட்டத்திற்கும் விரோதமில்லாமல் அமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது.
நீதித்துறை அமைப்பின் ஒரு அறிக்கையின்படி பீகார், சத்திஸ்கர், மணிப்பூர், ஒடிசா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் மத்திய அரசால் முன்மொழியப்பட்ட திட்டத்தில் பெரும் மாற்றத்தை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதம் நீதிமன்றங்களுக்கான கோடை விடுமுறை முடிந்தவுடன் இதைச் சார்ந்த விசாரணை மற்றும் விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...