தமிழகமெங்கும் தினந்தோறும் வாகன விபத்துகள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனை தவிர்க்கும் வகையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விபத்தை தடுப்பதற்காக போக்குவரத்து அதிகாரிகளிடம் ஆலோனையில் ஈடுபட்டார். அப்போது சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டிச்சென்றால் உடனடியாக அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். அதே போன்று சிவப்பு விளக்கை தாண்டி சென்றாலும் அவர்களின் ஓட்டுநர் உரிமம் அதிரடியாக ரத்தாகும். மேலும், வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்றால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். சரக்கு வாகனங்களில் அதிகமான பாரம் ஏற்றி சென்றால் வாகனத்தின் உரிமம் மற்றும் அதனை ஓட்டிச்செல்லும் டிரைவரின் உரிமம் அதிரடியாக பறிக்கப்படும். செல்போன் பேசிக்கொண்டே டூ வீலர் மற்றும் காரை ஓட்டிசெல்பவர்களின் உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக கூட ரத்து செய்யப்படும்.சாலையில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை செய்யும்பொழுது வாகனத்தின் ஒரிஜினல் சான்றிதழ்களை கேட்டால் காண்பிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...