மத்திய பிரதேசத்தில், வெங்காய உற்பத்தி அதிகரித்துள்ளதால், அரசுப் பள்ளிகள்
குடோன்களாகவும், ஆசிரியர்கள் வியாபாரிகளாகவும் மாறும் சூழல்
ஏற்பட்டுள்ளது.ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான்
முதல்வராக உள்ளார். மாநிலத்தில் இந்த ஆண்டு விவசாய உற்பத்தி பொருட்கள்
அதிகம் விளைந்துள்ள நிலையில்,
விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கக் கோரி, மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் முடிவு
இந்த போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இதில், சில விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, முதல்வர் சவுகான் உண்ணாவிரதம் இருந்தார்.
விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருக்க, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் சவுகான் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.
நிலைமை குறித்து வருத்தம்
இந்நிலையில், அதிகப்படியாக விளைந்துள்ள வெங்காயத்தை, விவசாயிகளிடம் இருந்து மாநில அரசு கொள்முதல் செய்துள்ளது;இதை, அரசுப் பள்ளிகளில் இருப்பு வைத்து, மதிய உணவு திட்டத்திற்கும், அரசு சாரா நிறுவனங்களிடம் விற்பனை செய்யவும், மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவை கண்காணித்து, கற்றல், கற்பித்தல் நடைமுறைகளை மேலும் சிறப்பிப்பது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும், ஜன் சிக் ஷா கேந்திராக்களில், வெங்காயம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இவற்றை, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெங்காயம் இருப்பு வைப்பு கணக்கு மற்றும் அதன் விற்பனை பணியில் ஈடுபட்டுள்ள, ம.பி., அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...