இன்றைய காலத்தில் வாட்ஸ்அப்
இல்லாத ஸ்மார்ட்ஃபோன்களையோ அல்லது நபர்களையோ காண்பது அரிது. உலகளவில்
தற்போது புதிய டிரெண்டாக உருவெடுக்கும் வாட்ஸ்அப் நாளுக்கு நாள் புதிய
அப்டேட்களை தருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப்பில் உள்ள எமோஜி,
பயனாளர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது.
இதன் காரணமாக பயனாளர்களை மேலும் கவர வாட்ஸ்அப் பல்வேறு எமோஜிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இவை முதற்கட்டமாக பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இமெயில் உள்ளிட்ட பல கோப்புகளை வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பும் வசதியையும் இதனுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.
வாட்ஸ்அப்-இல் எந்த மாதிரியான எமோஜி வேண்டுமோ அதனை டைப் செய்தால் அந்த எமோஜி தோன்றும். அதாவது, ஃபோன் என்ற எமோஜி வேண்டுமேனில், ஃபோன் (Phone) என்று டைப் செய்தால் நமக்கு போன் வகைகள் தோன்றும், அதில் நமக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வசதி பீட்டா (beta) 2.17.238 வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அனைத்து வெர்ஷன்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக, வாட்ஸ்அப்-இல் எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து விதமான ஃபைல்களையும் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...