பயிர் விளைச்சல் செய்யும் போட்டியில் பங்கேற்க வாருங்கள் என்று விவசாயிகளுக்குத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அழைப்புவிடுத்துள்ளார்.
பயிர் விளைச்சல் செய்யும் போட்டி குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'திருநெல்வேலி மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்வதற்கான பணி நூர்பாவும் பணி நடைபெற்றுவருகிறது. விவசாயிகள் வேளாண்மைத் துறை பரிந்துரைக்கும் அனைத்து நவீன வழிமுறைகளையும் பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் வகையில் திட்டமிட்டு பயிரிட வேண்டும். அவ்வாறு திட்டமிட்டு பயிரிடும்போது அதிகமான மகசூலைப் பெறமுடியும்.
பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் மாநில அல்லது மாவட்ட அளவில் பங்கேற்க முடியும்.
அதற்கான பதிவுக் கட்டணம் குறைவு. நெல் பயிருக்கான மாநில அளவு பதிவுக் கட்டணம் 100 ரூபாய், மாவட்ட அளவு பதிவுக் கட்டணம் 50 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம், உளுந்து ஆகிய பயிர்களுக்கும் தனித்தனியாக போட்டி நடைபெறும். மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் தனித்தனியாக நடத்தப்படும். நில உரிமையாளர்களும், குத்தகைதாரர்களும் கலந்து கொள்ளலாம். நில உரிமையாளரின் 50 சென்ட் அளவில் வேளாண்மைத் துறை அதிகாரிகளின் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டு மகசூல் எண்ணிக்கை கணக்கிடப்படும்.
நெல் பயிருக்கு மாநில அளவில் முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 15 ரூபாயும் வழங்கப்படும். மக்காச்சோளம் மற்றும் உளுந்து ஆகிய பயிர்களுக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை அதிகாரிகளை அணுகி போட்டியில் பங்கேற்றுக்கொள்ளலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பானப்போட்டி
ReplyDelete