மத்திய அரசின் தேசிய மகளிர் கொள்கையில் மாற்றம் வர போகிறது. குடும்ப தகராறு
வழக்குகளுக்கு விரைவில் தீர்வு, மகளிர் விடுதிகளின் எண்ணிக்கையை 10
மடங்குக்கு மேல் அதிகரிப்பது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
2001ல் திருத்தம்
இந்தியாவில் கடைசியாக, தேசிய மகளிர் கொள்கை, 2001ல் திருத்தம் செய்யப்பட்டது. காலத்திற்கு ஏற்ப இதில் மாற்றம் கொண்டு வர, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பல்வேறு ஆலோசனைகளை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு வழங்கி உள்ளது.
இதை தொடர்ந்து புதிய தேசிய மகளிர் கொள்கைக்கான இறுதி வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளனர். இந்த அறிக்கை, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தனியாக வாழும் பெண்களுக்கு குறைந்த வருமான வரி சலுகை
* திருமண பதிவு கட்டாயம்
*பணியிடங்களில் பெண்களுக்கு பங்களிப்புக்கு முக்கியத்துவம்
*சாதாரண குற்றங்களுக்காக விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள், குற்றத்திற்கான தண்டனை காலத்தில் மூன்றில் ஒரு பகுதியை சிறையில் கழித்து இருந்தால் விடுதலை
* ஆதார் எண் இணைப்புடன் கூடிய மருத்துவ சிகிச்சை அட்டை,
* வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த அனைத்து பெண்களுக்கும், அவர்கள் விரும்பி படிக்கும் காலம் வரை இலவச கல்வி
* பணி புரியும் பெண்களுக்கான விடுதிகளின் எண்ணிக்கையை, 10 மடங்கு அளவு அதிகரிப்பது
* வீடு இல்லாத விதவைகளுக்கு கூடுதல் வசதிகள்
* குடும்ப தகராறு வழக்குகளை விரைவில் முடிக்கும் அளவுக்கு கால அளவை நிர்ணயம் செய்வது என பல பரிந்துரைகள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
எனினும், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்த, ' ஆண்கள் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்; பெண்கள் தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்' போன்ற யோசனைகள் இந்த அறிக்கையில் இடம் பெறவில்லை

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...