TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பாலிடெக்னிக் தேர்வில் முதல் தர மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்ற அறிவிப்பு மாற்றக்கோரி தேர்வர்கள் கோரிக்கை.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பாலிடெக்னிக் த் தேர்வில் முதல் தர மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்ற அறிவிப்பு கண்டிக்தக்கது.இந்த அறிவிப்பால் கிராம புற, ஏழை எளிய , தமிழ் வழியில் படித்தவர்கள் , இதர பின் வகுப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணி நியமனம் போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவருக்கு மட்டும் கிட்டும்.. அப்படி இருக்கையில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே தேர்வு எழுத தகுதியானவர்கள் எனில்.. இரண்டாம் , மூன்றாம் தரநிலை பெற்றவர்கள் முட்டாள்களா? ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே கணினி ஆசிரியர்களின் வயிற்றில் அடித்தது. இப்போது என்ஜினியரிங், ஆர்ட்ஸ் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை அழிக்க நினைக்கிறது.. முதல் வகுப்பு விண்ணப்பதாரர்கள் என்றால் அவர்களின் மதிப்பெண் அடிப்படையிலே தேர்ந்தெடுத்து நியமனம் செய்யலாமே? டி.என்.பி.எஸ்.சி , யூ.பி.எஸ்.சி நடத்தும் ஆட்சியர்கள் தேர்வுகளில் கூட இந்த கொடுமை கிடையாது.
ஏற்கனவே 2013 ல் நடந்த TET தேர்வில் பல குழப்பங்களை உண்டாக்கி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 90,000 தேர்வர்கள் எல்லாம் பணிக் கிடைக்காமல் இருக்கும் நிலையில் இது போன்ற தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை பாலாக்கும் அறிவிப்புகள் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கண்டிப்பா மாற்றணும்
ReplyDeleteIt must be changed.all candidates upto third class must be allowed
ReplyDelete