அடல் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் அனைவரும் தங்களது
ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தால் மட்டுமே மத்திய அரசின் பங்களிப்பு
நிதி கிடைக்கும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைப்பு சாரா பணியாளர்களின் சமூகப் பாதுகாப்புக்காக அடல் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
அதன்படி, 18 வயதிலிருந்து 40 வயது வரை உள்ள எவரும் இந்தத் திட்டத்தின் கீழ் இணையலாம். குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் அவர்கள் செலுத்தி வர வேண்டும்.
மத்திய அரசும், தனது பங்களிப்பு நிதியாக ஆண்டொன்றுக்கு ரூ.1,000 வரை வழங்கும். இந்தத் தொகையை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மொத்தமாக சேர்த்து சம்பந்தப்பட்ட நபரது ஓய்வூதியத் திட்டக் கணக்கில் மத்திய அரசு வரவு வைக்கும்.
இந்தத் திட்டத்தில் தற்போது வரை 54 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக முக்கிய அறிவிக்கை ஒன்றை மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக உள்ளவர்கள் அனைவரும், தங்களது வங்கிக் கணக்கையும், ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காத பட்சத்தில் மத்திய அரசின் பங்களிப்பு நிதியானது சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட மாட்டாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...