பீஹார்
மாநிலத்தில், 97 வயது 'இளைஞர்' ஒருவர் எம்.ஏ., இரண்டாம் ஆண்டு தேர்வு
எழுதி அசத்தியுள்ளார்.
பிறந்தது எப்போது? பீஹார் மாநிலம், பாட்னாவை
சேர்ந்தவர் ராஜ்குமார் வைஸ்யா,97. இவர், 1920ம் ஆண்டு ஏப்ரல், 1ம் தேதி
உ.பி., மாநிலம், பேரலியில் பிறந்தவர். ஆக்ரா பல்கலையில், 1938 ம் ஆண்டு
இளம்கலை சட்ட பட்டப்படிப்பில் சேர்ந்தார். 1940ம் ஆண்டு பட்டம் பெற்றார்.
இதன் பிறகு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், 30
ஆண்டுகள் பணிபுரிந்து, 1980ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதன் பிறகு மனைவியுடன்
பேரலியில் வசித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன் வைஸ்யாவின் மனைவி
இறந்தார். இதன் பிறகு பீஹார் மாநிலம், பாட்னாவில் மகன் சந்தோஷ் குமார்
வீட்டில் வைஸ்யா வசித்து வருகிறார்.
கடந்த
ஆண்டு எம்.ஏ., ( பொருளாதாரம்) வகுப்பில், நாளந்தா திறந்தநிலை பல்கலையில்
சேர்ந்தார். முதல் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது இரண்டாம் ஆண்டு
தேர்வை எழுதி வருகிறார். இத்தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கியது. ஒரு வாரம்
தேர்வு நடக்கும்.
3 மணி நேர தேர்வு தேர்வு அறைக்கு வயது முதிர்வு காரணமாக சற்று சிரமத்துடன் நடந்து வந்தார். எனினும், மூன்று மணி தேர்வை ஆங்கில மொழியில் தனது பேரன் வயது ஒத்த சக மாணவர்களுடன் எழுதினார். அவர், 24 பக்க விடைத்தாள்களை பயன்படுத்தியதாக ஆசிரியர்கள் கூறினர். தனது கல்வி ஆர்வம் குறித்து வைஸ்யா கூறியதாவது:ஒரு மனிதன், 97 வயதாக இருக்கும் போது கூட, தன் கனவுகளை நிறைவேற்ற முடியும், எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க நினைத்தேன்.
தற்போது அதற்கு ஒரு உதாரணமாக திகழ்கிறேன். தோல்வியை ஒருபொழுதும் ஏற்க கூடாது என்ற செய்தியை இளம் தலைமுறையினருக்கு கூற விரும்புகிறேன். எதற்கும் வேதனை அடைய கூடாது. உடைந்து போக கூடாது.
தன்னை நம்புபவர்களுக்கு எப்போதும் வாய்ப்புகள் கிடைக்கும் என அவர்களுக்கு கூற விரும்புகிறேன். கனவு நிறைவேறும் எனினும், ஒரு மாணவனாக இந்த வயதில் அதிகாலையில் எழுந்து தேர்வுக்காக தயாராவது சற்று சிரமமாகவே இருந்தது. இந்த ஆண்டு எம்.ஏ., தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டால், என் நீண்ட நாள் கனவு நிறைவேறி விடும். என் முதல் ஆண்டு எம்.ஏ., தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தான் தேர்ச்சி அடைந்தேன்.இந்த நாட்டு மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை புரிந்து கொள்ளவே பொருளாதாரத்தை படிக்க விரும்பினேன்.
முதுகலை பட்டம் பெறுவது என் நோக்கம் அல்ல. பொருளாதாரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம். சட்ட படிப்பில் பட்டம் பெற்ற உடனே முதுகலை பட்டப்படிப்பை மேற்கொள்ள முடியவில்லை. அப்போது இருந்த குடும்ப சூழ்நிலையே அதற்கு காரணம்.
நான் சைவ உணவுகளை சாப்பிடுகிறேன். முதிய வயதை நெருங்கும் போதும் ஒவ்வொருவரும் ஒரு பொழுது போக்கை தேர்வு செய்ய வேண்டும். நான் புத்தகங்கள், பத்திரிகைகள் படிப்பேன். டிவி தொடர்கள் பார்ப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...