புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்து, 18 மாதங்கள் முடியும் நிலையில், டி.ஏ., உள்ளிட்ட திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய முழு சம்பளம், ஜூலை மாதம் முதல் கிடைக்கும்.
நாடு முழுவதும் உள்ள, 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 51 லட்சம்
ஓய்வூதியதாரர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டது.
கடும் அதிருப்தி :
'கடந்த, 2016, ஜனவரி மாதத்தில் இருந்து இது வழங்கப்படும்' என, கடந்த ஆண்டு
ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான
அடிப்படை சம்பளம், 16 சதவீதம், இதர படிகள், 63 சதவீதம் என, மொத்தம், 23.55
சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டது. பென்ஷன், 23.6 சதவீதம்
உயர்த்தப்பட்டது.அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டாலும், டி.ஏ., மற்றும்
எச்.ஆர்.ஏ., எனப்படும் வீட்டு வாடகைப் படி ஆகியவை குறைந்தது. இது,
ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதனால், படிகள் தொடர்பாக ஆய்வு செய்ய, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக்
லாவாசா தலைமையிலான ஒரு குழு அமைக்கப்|பட்டது. இந்தக் குழு தன் பரிந்துரையை,
இந்த ஆண்டு, ஏப்ரல், 27ல் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இந்தக் குழுவின்
பரிந்துரைகள் குறித்து, மத்திய கேபினட் செயலர் தலைமையிலான, அரசு செயலர்கள்
அடங்கிய உயர் அதிகாரக் குழு ஆய்வு செய்து, தன் இறுதி பரிந்துரையை அளித்து
உள்ளது.
49 லட்சம் ஊழியர்கள் :
வரும் வாரத்தில், இது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டு, படிகள் உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வரும், ஜூலை மாதம் முதல், திருத்தப்பட்ட
படிகளுடன் கூடிய புதிய சம்பளம், நாடு முழுவதும் உள்ள, 49 லட்சம் மத்திய
அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என, மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...