பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் வருகைப்பதிவேடு உட்பட, 63
பதிவேடுகளை பராமரிக்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கோடை
விடுமுறைக்கு பின், புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளது. வகுப்பு
செயல்திட்டம், நடைமுறைகள், மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்றவேண்டிய
நடைமுறைகள் குறித்து, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் உட்பட கல்வித்துறை அதிகாரிகள், ஆய்வு மேற்கொள்ளும்
போது, அனைத்து பதிவேடுகளையும் பார்வையிடுமாறு, இயக்குனர் இளங்கோவன்
உத்தரவிட்டார்.இதன்படி, பள்ளி விபர பதிவேடு, ஆசிரியர்- மாணவர் வருகை,
தலைமையாசிரியர்கள் கூட்ட விபர பதிவேடு, அன்னையர் குழு, கிராம கல்விக்குழு,
பள்ளி மேலாண்மை குழு உட்பட, 63 பதிவேடுகள் முறையாக பின்பற்றவும், மன்ற
செயல்பாடுகள் நடந்த பின், அறிக்கை எழுதவும், தலைமையாசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
63பதிவேடுகளளின் பட்டியல் வெளியிட்டால் நலமாக இருக்கும். நன்றி.. வணக்கம்..
ReplyDelete63பதிவேடுகளளின் பட்டியல் வெளியிட்டால் நலமாக இருக்கும். நன்றி.. வணக்கம்..
ReplyDelete