சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தையும், சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
சென்னை: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு
தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த
ஆண்டு தேர்ச்சி விகிதம் 5 சதவிகிதம் குறைந்துள்ளது. திருவனந்தபுரம் மண்டலம்
முதலிடத்தையும், சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி முதல், ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வரை நடந்த
10ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர்
எழுதினர்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன்பு
வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிகளை cbseresults.nic.in இந்த என்ற இணைய
தளத்தில் மாணவர்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்
மாணவர்களின் செல்போனுக்கும் மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 90.95 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு
96.21 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம்
5 சதவிகிதம் குறைந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...