நாளை பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கையின்போது 41 வகையான அறிவிப்புகள்
வெளியிடப்படுகிறது
அதன் முக்கிய அமசங்கள்
''கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் வர உள்ளன. சட்டப் பேரவையில் 15ம் தேதி அல்லது 16ம் தேதி கல்வி மானியக்கோரிக்கையின்போது 41 வகையான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முக்கிய அமசங்கள் :
''கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் வர உள்ளன. சட்டப் பேரவையில் 15ம் தேதி அல்லது 16ம் தேதி கல்வி மானியக்கோரிக்கையின்போது 41 வகையான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முக்கிய அமசங்கள் :
ரேங்க் அடிப்படையில், தனியார் பள்ளிகள் வீரநடை போட்டன. அதை முறியடித்து காட்டியது இந்த அரசு. பிளஸ் 1 தேர்வுக்கு, கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து, சிந்தித்து செயலாற்றி வருகிறது.
வரும், 15ல் பள்ளி கல்வித்துறையில், இந்த அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. அப்துல்கலாம் கனவை நிறைவேற்ற, நாங்கள் துடித்து கொண்டிருக்கிறோம்.
தனியாரை மிஞ்சும் அளவுக்கு, தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை ஓட்டம் உள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், சிறந்த கல்வியாளர்கள் மட்டுமின்றி, மனித நேயத்தோடு சிந்திக்க கூடியவர்கள்.
தமிழக சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கூட்டப்படுகிறது. அப்போது துறைவாரியாக மானியகோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு முடிவில் துறையின் அமைச்சர் பதில் அளிப்பார். வரும் 16-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் செங்கோட்டையன் பேச உள்ளார். இது குறித்துத்தான் அவர் முன்பே செய்தியாளர்களிடம் சொல்லி இருக்கிறார் என்று கல்வித்துறை வட்டாரத்தில் சொல்கின்றனர்.
*அமைச்சர் அறிவிக்கப்போவதாக வரும் தகவல்கள் இவைதான்;*
(1)பள்ளிகளில் நியமிக்கப்படும் பகுதி நேர ஆசிரியர்கள் இனிமேல் அவர்களின் சொந்தமாவட்டத்தில் பணிமாறுதல் செய்யப்படுவார்கள்.
(2) மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நியமிக்கப்படும். கூடுதல் பணியிடங்களும் உருவாக்கப்படும். விளையாட்டு பீரியடில் மாணவர்களை விளையாட அனுமதிக்கும்படி உத்தரவிடப்படும்.
(3) தற்போது பள்ளிகளில் உள்ள பழைய கம்ப்யூட்டர்கள் மாற்றப்பட்டு புதிய இப்போதைய அப்டேட்டுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.
(4) மாணவர்களுக்கு அவர்களின் ரத்த வகை, ஆதார் எண் ஆகியவை அடங்கிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஸ்மார்ட் கார்டுகள் மூலமே வழங்கப்படும்.
*நீட் தேர்வுக்கு பயிற்சி*
பள்ளி
(5) பாடத்திட்டங்களை மாற்றுவதற்காக பல்கலைக்கழக துணைவேந்தர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகள் அடங்கிய வல்லுனர்கள் குழு அமைக்கப்பட உள்ளது.
(6) மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் கையேடு வழங்கப்படும். நீட் தேர்வு மற்றும் ஐ.ஐ.டி-களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
(6) மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் கையேடு வழங்கப்படும். நீட் தேர்வு மற்றும் ஐ.ஐ.டி-களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
(7) மதுரை மற்றும் கோவையில் ஆசிரியர் இல்லங்கள் புதிதாக திறக்கப்பட உள்ளது.
(8)ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணி மாறுதல்கள் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படும்.
(9) மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
(10) பள்ளிகளில் தூய்மையை மேம்படுத்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகள் வகுப்புக்கு இருவர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர்.
(11) அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும். இதற்காக மனவளக்கலை மன்றத்தில் பயிற்சி பெற்றவர்கள் சம்பளம் இன்றி தன்னார்வலர்களாக நியமிக்கப்படுவார்கள்.
(12) அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடம் கட்டாயம் ஆக்கப்படும்.
(13) ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் பி.எட் மற்றும் டெட் முடித்து காத்திருக்கும் ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.
(14) ஒரே பள்ளியில் 5 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் மட்டும் இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி உள்ளவர்கள்.
(15) அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்தால் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
(16) தமிழ் வழியில் படித்து பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
(17) அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் இருந்து மூன்று வெவ்வேறு வண்ணங்களில் புத்தகப்பை வழங்கப்படும்.
இந்த 17 அறிவிப்புகள் தவிர மொத்தம் 41 அறிவிப்புகளை வரும் 16-ம் தேதி அன்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் நீட் தேர்வு, யோகா கற்றுத்தரப்படும், அரசு ஊழியர்கள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும் என்பது உள்ளிட்ட சில அறிவிப்புகள் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
First handicap person ku posting podunga apuram unga arivippu thodaradum.
ReplyDelete