உங்களால் அலுவலகம் சென்று காலை 9 முதல் 5 மணி வரை வேலை செய்ய முடியவில்லையா
உங்களது பெற்றோர் உடன்மும், குடும்பங்களுடனும் நேரத்தைச் செலவிட
விரும்புகின்றீர்களா அதே நேரம் வருமானமும் வேண்டுமா?
உங்களுக்கு ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் வீட்டில் இருந்தபடியே இருக்கின்றது. இதோ அவற்றில் சில..
விர்ச்சுவல் அசிடண்ட்ஷிப
தொழில்முனைவோர், வேலை செய்பவர்கள் மற்றும் சிறிய அணிகள் பெரும்பாலும் பல்வேறு நிர்வாகப் பணிகளுக்கு உதவ வேண்டும்.
வாடிக்கையாளர்களுடனும் முதலீட்டாளர்களுடனும் தொடர்பு கொள்ளுதல்,
பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிகள் மற்றும் எக்செல் ஷீட்கள் போன்ற வணிக
ஆவணங்களை உருவாக்குதல், வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்களை நிர்வகித்தல்,
முதலியன போன்ற வாடிக்கையாளர்களுடனான மெய்நிகர் உதவியாளர்கள் பணிகளாகக்
கிடைக்கும்.
ஒரு விரிச்சுவல் அசிச்டண்ட் ஆனவர் உங்கள் தகுதிகளைப் பொறுத்து, பயிற்சி
அல்லது கூட்டத்தில் சில வகுப்புகளை வழங்கலாம். இருப்பினும், உங்களிடம் நல்ல
திறனாய்வு திறன் இருந்தால், MS Office போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்த
முடியும் என்றால், நீங்கள் Elance மற்றும் Zirtual.com போன்ற தளங்களில்
பதிவு செய்யலாம் விரிச்சுவல் வேலையைத் தொடங்கலாம்.
மொழி பெயர்த்தல்
உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரியும் என்றால் உங்களுக்காகவே
இந்த வேலை வாய்ப்பு ஆகும். உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்து அதனை இந்திய
மொழிகளில் மொழிமாற்ற செய்ய முடியும் என்றால் போதும் வருமான ஈட்டலாம். இல்லை
என்றால் மொழி வகுப்புகள் எடுக்கலாம்.
உலகளவில் மிகப் பெரிய நிறுவனங்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள் மொழிபெயர்ப்பு
சேவையை எதிர்பார்க்கின்றனர். இதற்கு நீங்கள் Fiverr.com அல்லது Upwork.com
என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மொழிபெயர்ப்பு மூலமாக 1
வார்த்தைக்கு 70 பைசா முதல் 5 ரூபாய் வரை நீங்கள் சம்பாதிக்கலாம். இதுவே
சில வெளிநாட்டு மொழிகளுக்கு 10 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
பிலாக்
சொந்தமாகக் கட்டுரைகள், ஹெல்த், டெக் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ஸ் அளிக்க
முடியும் என்றால் ஒரு பிளாக் கிரியேட் செய்து அதில் ஆட்சென்ஸ் உள்ளிட்ட
சேவை மூலமாக விளம்பரங்கள் பெற்றும் அதன் மூலம் சம்பாதிக்கலாம். அதுமட்டும்
இல்லாமல் அஃப்லியேட் மார்க்கெட்டிங் போன்றவை மூலமாகவும் சம்பாதிக்கலாம்.,
இந்த விளம்பரங்கள் மூலமாக 2,000 ரூபாய் முதல் 15,000 வரை ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கலாம்.
உங்கள் தயாரிப்புகளை இணையத்தில் விற்பனை செய்யலாம்
நீங்கள் சொந்தமாக ஒரு பொருட்களைத் தயாரிக்கின்றீர்கள் என்றால் அதை ஆப்லைன்
மட்டும் இல்லாமல் இணையதளம் மூலமாகவும் விற்பனை செய்யலா. இதற்கு நீங்கள்
பிளிப்கார்ட், அமேசான், ஈபே உள்ளிட்ட தளங்கள் பதிவு செய்து உங்கள்
தயாரிப்பு மற்றும் அதன் விளக்கங்கள், படங்கள் போன்றவற்றை அப்டேட் செய்து
விற்பனை செய்யலாம்.
உங்களுடைய தயாரிப்பு, விலை மற்றும் தேவையைப் பொருத்து அதிகளவில் சம்பாதிக்க முடியும்.
யூடியூப் வீடியோ
உங்களுக்குக் கேமராவை கண்டு பயம் இல்லை ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க
முடியும் என்றால் சொந்தமாக ஒரு வீடியோ கிரியேட் செய்து அதை யூடியூபில்
அப்லோடு செய்து அதனைப் பிறரை பார்க்க வைக்கலாம். அதுமட்டும் இல்லாமல் அந்த
வீடியோக்கலுக்கு ஆட்சென்ஸ் மூலமாக இணைத்து மானட்டைசிங் செய்து
பார்வையாளர்களை வைத்துச் சம்பாதிக்கலாம்.
யூடியூபில் உங்கள் வீடியோவை 1,000 நபர்கள் பார்த்தால் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
வெப் டெவலப்மெண்ட்
உங்களுக்கு இணையதளம் உருவாக்க கூடிய கணினி மொழிகள் தெரியும் என்றால் அதன்
மூலமாக இணையதளங்கள் உருவாக்கும் சேவைகளை வழங்கி உங்களுக்குக் கிடைக்கும்
கிளைன்ட் பொருத்து 20,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை
சம்பாதிக்கலாம்.
நீங்கள் இணையதளம் மூலம் ஒருவருக்கு வேலை செய்யும் போது அவர்கள் வேலையை
வாங்கிக் கொண்டு உங்களை ஏமாற்றவும் கூடும். அதனால் அடிப்படை செலவுக்கான
கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு பணிகளைத் துவங்கவது நல்லது.
உள்ளடக்க எழுதுதல்
உங்களுக்கு ஏதேனும் மொழியில் எந்தப் பிழையும் இல்லாமல் கட்டுரை போன்றவற்றை
எழுத முடியும் என்றால் அந்தத் திறனை வைத்துக் கட்டுரைகள் எழுதிச்
சம்பாதிக்கலாம்.
அதுமட்டும் இல்லாமல் சில பொருட்கள் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்பினை
உங்களுக்கு அளித்து அது பற்றியும் கட்டுரை எழுதத் தர அளிப்பார்கள். இதற்கு
நீங்கள் Fiverr.com அல்லது Upwork.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய
வேண்டும். மேலும் இந்த வேலிகளின் மூலமாக மாதம் 8,000 ரூபாய் முதல் 25,000
ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
ஆன்லைன் டியூசன்
நீங்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் நால் அறிவாற்றல் உள்ளவர்கள் அந்தப்
பாடத்தில் பட்டமும் பெற்றுள்ளீர்கள் என்றால் MyPrivateTutor.com,
BharatTutors.com, tutorindia.net என்ற இணையதளங்களில் பதிவு செய்து
இணையதளங்கள் மூலமாக டியூசன் வகுப்பு எடுத்து மணி நேரத்தில் 200 ரூபாய்
முதல் 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
டேட்டா எண்டிரி
ஆடோமேஷன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் இந்தியாவில் டேட்டா எண்டிரி தொழில் பெறும் பாதிப்பை அடைந்துள்ளது.
உங்களுக்கு டைப்புங் ஆற்றால் இருந்தால் போது மணி நேரத்திற்கு 300 ரூபாய்
முதல் 1,500 வரை சமாதிக்கக் கூடிய பணிகள் இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு
சரியான வாடிக்கையாளர்கள் கிடைப்பது பெறும் சிரமாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...