ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி நடக்கிறது.இது குறித்து, ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா, 'டீன்' சுவாமிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் வரும், 4ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கு, 1.90 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். 74 நகரங்களில், 338 மையங்களில் தேர்வு நடக்கிறது. நுழைவுத் தேர்வு, காலை, மாலை என, இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. தேர்வு மையங்களில், மாணவர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நுழைவுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றை அவசியம் எடுத்து வர வேண்டும்.
தேர்வு மையங்களில், 'சிசிடிவி' கேமராக்கள், அலைபேசியை செயல் இழக்கச் செய்யும் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒரு நாள் முன்னதாக தேர்வு மையங்களை உறுதி செய்து கொள்வது நல்லது. காலை, 8:00 மணியில் இருந்து தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். காலை, 9:30 மணிக்கு பிறகும், மதியம், 2:30 மணிக்கு பிறகும் தேர்வு அறையில் எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வரும், 19ம் தேதிக்கு முன், ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., 'ரிசல்ட்' வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...