முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம்
தொடங்கியது; ஜூன் 14ல் சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம்
இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில் நிலங்களுக்கான பட்டாக்களின் வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைக்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நிலங்களுக்கான பட்டாக்களின் வழிகாட்டு மதிப்பு அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து பத்திரப் பதிவு துறையில் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் விளைநிலங்களுக்கு பட்டா வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதனால் கடந்த ஓராண்டில் ரூ 1500 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதை சரிகட்டுவதற்காக தற்போது இந்த குறைப்பு நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அரசானை இன்றோ நாளையோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...