அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் வி.சரோஜா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் சமூக நலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைமானிய கோரிக்கைமீது நடந்த விவாதத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதாஜீவன் பேசுகையில்,
''மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 3 சக்கர ஸ்கூட்டர் மோசமான நிலையில் இருந்தால் திமுக ஆட்சியின் போது புதியவாகனம் வழங்கப்பட்டது. தற்போது புதியவானகங்கள் இருப்பு இல்லை.அதே நேரம் பழுதுபார்த்தும் தரப்படுவதில்லை. இதற்கு ஒதுக்கப்பட்ட தொகையும் பயன்படுத்தப்படவில்லை.பள்ளிக்கல்வித்துறை மற்றும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றும் சிறப்பாசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மாநிலஆணையர், துறை செயலர் பதவிகள் காலியாக உள்ளன. சமூக நலத்துறையில் குறிப்பிட்ட திட்டங்களில் அதன் இலக்குகள்எட்டப்படவில்லை. திருநங்கை நலவாரியம் செயல்படாமல் உள்ளது. அங்கன்வாடிகளில் 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும்'' என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரோஜா, ''பிச்சைக்காரர்கள், தெருவோர வாசிகளை மறுவாழ்வுக்காக நேரடியாக சமூக நலத்துறை ஏற்க முடியாது. காவல்துறையினர் அவர்களை ஒப்படைத்தால் மட்டுமே அடுத்த கட்டமாக மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய முடியும்.சிறப்பாசரியர்களுக்கு ரூ.5ஆயிரமாக இருந்த தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
PH Person ku uruppadiyana arivippu onum illa........... padicha PH candidate ku posting first podunga
ReplyDelete