நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ தேர்வை எழுதினர்.
இந்தத் தேர்வு முடிவுகள், கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருந்தது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில், மதிப்பெண் கூட்டலில், மிகப்பெரிய பிழை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.தேர்வு முடிவுகள் வெளியானதும், சில மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர். முக்கியமாக, மும்பையைச் சேர்ந்த ஒரு மாணவர் மற்ற பாடங்களில் 80 சதவிகித மதிப்பெண் எடுத்தார். ஆனால், கணிதப் பாடத்தில் மட்டும் 50 மதிப்பெண் எடுத்தார். மறு கூட்டல் முடிவில், அவர் கணிதத்தில் 90 மதிப்பெண் எடுத்தது தெரிய வந்துள்ளது.
இது போல, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த பலருக்கும், குறைந்த மதிப்பெண் போடப்பட்டது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து, போடப்பட்ட மதிப்பெண்ணுக்கு 400 சதவிகிதம் இடைவெளி உள்ளதாக கூறப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, மதிப்பெண் கூட்டுதலில் பிழை ஏற்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிரச்சியடைந்துள்ளனர். இது குறித்து, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் பிரதமரிடம் முறையிட பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...