மருத்துவ சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவு தேர்வில், 29 வகை வினாத்தாள்களுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அனைத்து மாநிலங்களிலும், மத்திய, மாநில அரசு
ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில் சேர,
'நீட்' தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், அனைத்து
மாநிலங்களிலும், 'நீட்' தேர்வு அறிமுகமாகியுள்ளது. மே, 7ல் நடந்த, 'நீட்'
தேர்வில், தேர்வர்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதேபோல், நாடு முழுவதும், ஒரே வகை வினாத்தாள் இல்லை என்றும் புகார்
எழுந்தது.
இந்நிலையில், வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு, நேற்று சி.பி.எஸ்.இ.,யின்,
http://cbseneet.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், 29 வகை
வினாத்தாள்களுக்கான, விடைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்தம், 180
வினாக்களுக்கு, விடைகள் உள்ளன. இவற்றை தேர்வர்கள் பார்த்து, விடையில்
மாற்றம் இருந்தால், உரிய ஆதாரத்துடன், இன்று மாலை, 5:00 மணிக்குள்
தெரிவிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...