மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,536 பணியிடங்களை நிரப்பும் வரை,
தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள, பள்ளிக்கல்வித்துறை அனுமதி
வழங்கியுள்ளது.
தமிழகத்தில், 2,500க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,645
முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 2,536 பணியிடங்களை
நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள்முடிந்து, ஆசிரியர்களை நியமிக்க குறைந்தபட்சம், நான்கு மாதங்களாகிவிடும். நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பும் பொதுத்தேர்வு என, அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள பள்ளிகளில், மாணவர்களின் கற்பித்தல் பணிகள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில், காலிப்பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதியளித்து, பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 2,536 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தேர்வு செய்து நிரப்பப்படும் வரை, ஜூன் முதல், செப்டம்பர் வரையுள்ள நான்கு மாதங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ளலாம்.அந்தந்த ஊர்களில், அந்தந்த பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களை, நியமித்துக் கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலை வகுப்பு துணைத்தலைமை ஆசிரியர், ஒரு முதுகலை ஆசிரியர் கொண்ட தேர்வுக்குழு மூலம், நியமனம் செய்யப்பட வேண்டும்.இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதந்தோறும், 7,500 ரூபாய்வழங்கப்படும். இதற்காக, தமிழகம் முழுவதும், 7.61 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

ANY VACANT IN COMPUTER SCIENCE
ReplyDeleteIS IT POSSIBLE FOR MSC COMPUTER SCIENCE
ReplyDeleteITS APPLICABLE FOR CS
ReplyDelete