மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி மையங்களின் எண்ணிக்கையை 240ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
பல்கலையில் தொலைநிலைக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
துணைவேந்தர் செல்லத்துரை தலைமையில் நடந்தது. இயக்குனர் கலைச்செல்வன்,
பதிவாளர் சின்னையா, கூடுதல் இயக்குனர் பாலகிருஷ்ணன், கூடுதல் தேர்வாணையர்
விஜயதுரை மற்றும் 62 மைய ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
செல்லத்துரை பேசியதாவது: தற்போது 82 கல்வி மையங்கள் உள்ளன. இவை 240ஆக
அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அறிவியல் படிப்புகளில் மாணவர் செய்முறை
பயிற்சிக்கு அருகில் உள்ள கல்லுாரிகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
மையங்களில் படித்தவர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள 30 ஆயிரம்
சான்றிதழ்கள் துணைவேந்தர் கையெழுத்துடன் ஒரு வாரத்தில் வழங்கப்படும்.
மையங்கள் கோரிக்கையை ஏற்று, வரும் கல்வியாண்டில் பி.எஸ்சி., எம்.எஸ்சி.,
யோகா படிப்புகள் துவங்கப்படும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில்
கணினி சர்வர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். ஞாயிறு உட்பட அனைத்து
நாட்களிலும் இரவு 8:00 மணி வரை மாணவர் சேர்க்கை நடத்த வசதி
ஏற்படுத்தப்படும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...