கால்நடை
மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த, ௩௮௦ இடங்களில் சேர, 23 ஆயிரம் பேர்
விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு கால்நடை பல்கலையில், இளநிலை பாடப்பிரிவில்,
நான்கு படிப்புகளுக்கு, ௩௮௦ இடங்கள் உள்ளன. அவற்றுக்கான ஆன்லைன் பதிவு,
ஜூன், ௫ல், முடிந்தது. இதில், ௨௩ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து, கால்நடை பல்கலையினர்கூறியதாவது: இதுவரை இல்லாத அளவுக்கு, இம்முறை அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கால்நடை அறிவியல் பிரிவில், 17 ஆயிரத்து, 87; உணவு தொழில்நுட்பம், 2,646, கோழியின வளர்ப்பு, 1,205 மற்றும் பால்வளம், 2,083 என, 23 ஆயிரத்து, 21 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப விற்பனை வகையில், பல்கலைக்கு, ௧.௫ கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.ஆன்லைனில் பதிவு செய்த மனுவை பதிவிறக்கம் செய்து, கால்நடை பல்கலைக்கு அனுப்புவதற்கான கடைசி தேதி, ஜூன், ௧௦ ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது; அது, ஜூன், 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...