நிகழ் கல்வியாண்டுக்கான பி.இ. மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை,
பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
பி.இ. படிப்புகளில் சேர இந்த முறை 1 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர். தபால் மூலம் வரும் விண்ணப்பங்களைச் சேர்க்கும்போது, இந்த எண்ணிக்கை 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கூட வாய்ப்புள்ளது. இருப்பினும், இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும்.
கடந்த 2016 -17 கல்வியாண்டில், 2 லட்சம் பேர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தனர்.
இவர்களில் 89,769 பேர் பி.இ. படிப்புகளில் சேர்க்கை பெற்றனர். ஆனால், இம்முறை இந்த எண்ணிக்கையும் வெகுவாகக் குறையும் என்கின்றனர் பேராசிரியர்கள்.
கலந்தாய்வு: இந்த நிலையில், 2017-18 கல்வியாண்டில் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் 27 ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஜூன் 22-இல்...: முன்னதாக, பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூன் 20 -இல் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் 22 இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூன் 27 இல் தொடங்கி, ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்.
பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி தொடங்கப்படும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...