தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட்.
கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு 1,777
இடங்கள் உள்ளன.
இந்த படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் சென்னை
விலிங்டன் பி.எட். கல்லூரி, சைதாப்பேட்டை பி.எட். கல்லூரி உள்பட 13 பி.எட்.
கல்லூரிகளில் 21-ந்தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படுகின்றன. 30-ந்தேதி
வரை விண்ணப்பம் வழங்கப்படும், விலை ரூ.500. ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினருக்கு ரூ.250.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5 என்ற முகவரிக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்கவேண்டும். இந்த தகவலை கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே B.Ed முடிச்சுட்டு, TETம் pass பண்ணிட்டு இருக்கிறவர்களுக்கே பட்ஜெட்ல 'உருப்படியான' அறிவிப்பை காணோம். இந்த லட்சணத்துல இது வேற...!
ReplyDeleteWelcome
ReplyDelete