அரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்
கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில்.
1)அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?
2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?
3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?
4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?
5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
6)பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ?
7)ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது ?
8)ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது ?
9)பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ?
10)இதுவரை எத்தனை ஆங்கில வழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் ? என்றும் நீதிமன்றம் வினா தொடுத்துள்ளது.
11)ஆங்கில வழி ஆசிரியர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர் ?
12)அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்காணிக்க பறக்கும் படையை தமிழக அரசு அமைத்துள்ளதா ?
13)ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதை கண்டறிய ஏன் கை விரல் ரேகையை பதிவிடும் இயந்திரத்தை (Bio metric) பொருத்தக்கூடாது ?
14)ஆசிரியர்களின் வருகையை நாள் முழுவதும் கண்காணிக்க வகுப்பறையில் சிசிடிவி கேமரா பொருத்த வாய்ப்புள்ளதா ?
15)கடந்த 10 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வின் தேர்ச்சி விகிதம் என்ன ? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
16)கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புற அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் என்ன ?
17)கடந்த 10 ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?
18)கிராமப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?
19)மாறி வரும் கல்வி கற்பிக்கும் முறைக்கு ஏற்ப, அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா ?
20)அரசு ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் பணிபுரிவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன ? என்றும் நீதிபதி சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.
Dear admin, அதெல்லாம் சரி!. ஆனால் நீங்கள் பதிவிட்டுள்ள கார்டூன் குற்றவாளி கையும்மாகளவுமாக மாட்டிக்கொண்டான் என்பது போல உள்ளது.நம் சமுதாயத்தை உயர்த்தும் நோக்கில் தொடங்கிய இந்த இணையம், அதை நோக்கியே செல்லட்டும். நன்றி!.
ReplyDeletePlease read again Title
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதனியார் பள்ளி கூடம் தொடங்குவதை அரசு அனுமதிக்க கூடாது என்று சொல்லாலமே , இந்தியர் அணைவரும் இந்தியாவில் மட்டும் தான் படிக்க வேண்டும் , வெளிநாட்டில் படிக்க கூடாது என்று சொல்ல வேண்டியது தானே. பிரச்சனைகள் கேள்விக்கு கேட்பது அல்ல , சிந்திக்கும் நேரம். எல்லா அரசு ஊழியர்களின் குழந்தைகளும் அண்ணா university மற்றும் government medical college தான் சேர விரும்புகிறார்கள் அதுவும் அரசாங்கம் நடத்துவதான் அப்படியென்றால் பிரச்சனை தரம் தான் கேள்வி, அதை செய்ய ஆலோசனை செய்ய வேண்டுமே தவிர , பிரச்சனையை திசை தருப்ப கூடாது.
ReplyDeleteSuper.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGOOD JUDGE SIR
ReplyDeleteதனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது அரசுதானே! அதனை மூடிவிட்டால் அரசுப் பள்ளிகளில்தான் சேர்த்தாக வேண்டும்.தனியார் பள்ளிகளை நீதிமன்றம் உத்தரவிட்டு மூடத்தயாராக உள்ளதா?
ReplyDeleteஅரசுப்பள்ளியில் அரசு ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்தால் அரசு மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் மட்டும் மருத்துவம் பார்ப்பார்களா? ஆசிரிய சங்கங்கள் தடை செய்யபபட்டால் அது பிற துறைகளுக்கும் பொருந்துமா?அரசாங்க பிற துறை ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கலாமா? கிடுக்கிப்பிடி கேள்வி கேட்கும் நீதித்துறை தாய்மொழி வழிககல்வியை அனைவருக்கும் கட்டாயமாக்கி சட்டம் இயறறலாமே!முன் வருமா?அரசுப்பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்பதை சட்டமாக்கலாமே! இதை விட்டு எதற்காக இத்தனை கேள்விகள்.
ReplyDelete6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலும் வணிகவியல் என்ற பாடத்தை ஏன் சேர்க்க கூடாது என்ற கேள்வியும் கேட்டிருக்கலாம்
ReplyDeleteஅப்படி என்றால் M.Com., B.Ed., படித்தவர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் மேலும் அவர்களும் TET EXAM எழுத வாய்ப்பு இருக்கும்