கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள, 20 அலுவலக உதவியாளர்
பணியிடத்திற்கு, 20 ஆயிரத்து 619 பேர் விண்ணப்பத்துள்ளனர். நேர்காணலில்,
1,322 பேர் பங்கேற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, வருவாய்த் துறையின் கீழ் உள்ள, 53
துறைகளில், 20 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடத்தை
நிரப்ப, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக
அறிவிப்பு வெளியிடப்பட்டது.
8ம் வகுப்பு தகுதிஅறிவிப்பில், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பணி செய்வோர், அவர்களது உறவினர்கள் உள்ளிட்டோர் அரசியல்வாதிகளின் சிபாரிசு கடிதத்துடன் விண்ணப்பித்திருந்தனர்.இதில், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தவிர, எம்.பி.ஏ., -- பி.எஸ்.ஸி., -- எம்.ஏ., -- பி.இ., உள்ளிட்ட பல்வேறு பட்ட மற்றும் பட்டயப்படிப்புகள் படித்தவர்களும் விண்ணப்பித்திருந்தனர். அறிவிப்பு வெளியட்ட நாளிலிருந்து, ஒரு மாத கால அவகாசத்தில், 20 ஆயிரத்து 619 விண்ணப்பங்கள், இப்பணியிடத்துக்கு வந்து சேர்ந்தன.விண்ணப்பங்களை தகுதி வாரியாக பிரித்து, வகைப்படுத்தி, அவற்றை தரம்பிரித்து, தகுதியான விண்ணப்பதாரர்கள் என, 1,322 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது முகவரிக்கு நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களது மொபைல் எண்ணிற்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
மாலை வரை நேர்காணல்இதையடுத்து நேற்று, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) சுரேஷ் தலைமையில், ஏழு துணைக் கலெக்டர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ், 14 அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, நேற்று அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடத்தினர்.கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில், காலை, 10:00 மணிக்கு துவங்கிய நேர்காணல், மாலை, 5:00 மணி வரை நீடித்தது. கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் அப்பணிகளை தவிர்த்து, நேர்காணலுக்கான பணிகளில் இறங்கினர்.அதிகபட்சம் எம்.பி.ஏ., படித்த பலரும், அலுவலக உதவியாளராக அரசுப் பணியில் இணைந்து, துறைரீதியான போட்டித்தேர்வுகளை எழுதி தேர்வாகி, உயர் பதவிக்கு விரைவாக சென்றுவிடலாம் என்ற நோக்கில் பங்கேற்றதாக விண்ணப்பதாரர்கள் கூறினர். நேர்காணலை, துணை மற்றும் உதவி கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் நடத்தினர். அதில் அலுவலக உதவியாளர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேள்விகளை விண்ணப்பதாரரிடம் கேட்ட அதிகாரிகள், நடைமுறைக்கு மாறாக, 'டீ' கப்பில் எந்த அளவு 'டீ' உற்றுவீர்கள்; கப் - சாசரை இணைத்து கொடுக்க வேண்டுமா... தனித்தனியாக கொடுக்க வேண்டுமா; 'டீ'யை தட்டில் வைத்து கொடுப்பீர்களா; கையால் கொடுப்பீர்களா உள்ளிட்ட கேள்விகளை கேட்டு பதில் பெற்றனர்.சைக்கிள் ஓட்டத் தெரியுமா... மணிக்கு எவ்வளவு வேகத்தில் ஓட்டுவீர்கள் மற்றும் அலுவலகத்தை சுத்தம் செய்வது, கோப்புகளை வரிசைப்படுத்துவது, வகைப்படுத்துவது, அதிகாரிகளை பார்க்க வரும் பார்வையாளர்களை எப்படி வகைப்படுத்துவது? வாய்த்தகராறில் ஈடுபடுவோரிடம் எந்த வகையான அணுகுமுறையை கையாள்வது போன்ற கேள்விகளும் நேர்காணலில் இடம் பெற்றன.
20ல் முடிவுநேர்காணலுக்கான முடிவுகள், 20 நாட்களுக்குள் கலெக்டர் அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியீடு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது (பொறுப்பு) சுரேஷ் கூறியதாவது:பதவிக்கு ஏற்றவரா, பொறுத்தமானவரா என்பதை சோதிக்கத்தான் விண்ணப்பதாரரிடம் நேர்காணலில் கேள்விகள் கேட்கப்பட்டன. அது தவிர்க்க முடியாதது. இந்த கேள்விகள் விண்ணப்பதாரர்களின் மனதை புண்படுத்துவதற்கானது அல்ல. நிர்ணயிக்கப்பட்ட, தேவையான கேள்விகளை கேட்டோம். விண்ணப்பதாரரின் தகுதிகள், பொறுப்புகள், கூடுதல் தகுதிகள், அனுபவம் போன்றவற்றை பதிவு செய்துள்ளோம். விண்ணப்பதாரரை இறுதி செய்வது குறித்து உயர் அதிகாரிகள் முடிவு செய்வர்.இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்வு ஒளி பெறாது!8ம் வகுப்பு கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்ட பணிக்கு எம்.பி.ஏ., - பி.இ., படித்தவர்கள் விண்ணப்பிப்பதால், வெறும் 8ம் வகுப்பு மட்டுமே படிக்கும் சூழல் வாய்க்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோரால் அரசு வேலைக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. பி.இ., படித்திருந்தும் அதிகாரிகளின் சிபாரிசு, அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுப்பது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு, குறைந்த கல்வித்தகுதிக்கான அரசுப்பணியை எப்படியும் வாங்க பலரும் முயற்சிக்கின்றனர். இவர்களின், 'கல்வித் தகுதிக்கான வேலைகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உயர் கல்வி கற்றோர் இம்மாதிரியான பணிக்கு விண்ணப்பிக்கக் கூடாது' என்ற சட்டம் வகுக்கும் வரை, குடும்பச் சூழலால் உயர் கல்வி பயிலும் வாய்ப்பை இழந்தோரின் வாழ்வு ஒளி பெறாது.
ரூ.5 லட்சத்துக்கு ஓ.ஏ., வேலை!கலெக்டர் அலுவலகத்தில் காலியாக இருக்கும், அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்றுக்கு, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்படுவதாகவும், ஏற்கனவே தொகை கொடுத்து அதற்கான டோக்கனை விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ளதாகவும், அந்த டோக்கனை காண்பித்தோரின் விண்ணப்பங்கள் மட்டும் தேர்வு செய்யப்படும் என்றும் தெரிகிறது. கோவை மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்ற நிகழ்வு தான் தொடர்கதையாகியுள்ளது. ஒரு பணியிடத்துக்கு 5 லட்சம் ரூபாய் என்றால், 20 இடங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை 'பார்க்க' அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் திட்டமிட்டுள்ளனர்.

ஆடு, மாடு மேய்ப்பதை அரசுப் பணியாக்கினால்தான் 'அரசுப்பணி' என்ற மோகம் குறையும்.
ReplyDeleteThen ofter v ll go to do cow or animal cleaning work...
ReplyDelete