கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், கணிதத்துடன் இணைந்த வணிகவியல் படிப்புக்கு
கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில், தனியார்
அரசு உதவி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முடிந்து
விட்டது.
நேற்று முதல், பிளஸ் 1 வகுப்பு கள் துவங்கி உள்ளன.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தனியார் மற்றும் கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், அறிவியல்
படிப்புக்கு மட்டுமின்றி, வணிகவியல் பாடப்பிரிவை தேர்வு செய்ய, கடும்
போட்டி ஏற்பட்டுள்ளது. அதிலும், கணிதம் இணைந்த வணிகவியல் பாடப்பிரிவில்
சேர, அதிக மாணவர்கள்
விண்ணப்பித்து உள்ளனர்.
இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,
கணிதம் தனியாகவும், வணிகவியல் தனியாகவும் பாடப்பிரிவு கள்
பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், குறிப்பாக, கே.வி.,
பள்ளிகளில், கணிதம் - கம்யூ., சயின்ஸ், கணிதம் - அறிவியல், அறிவியல்
மட்டும், வணிகவியல் - ஹிந்தி, வணிகவியல் - ஆங்கிலம் மற்றும் கணிதம் என,
பாடப்பிரிவுகள் உள்ளன.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், பி.காம்., போன்ற
படிப்புகளில் சேர, வணிகவியல் படித்திருக்க வேண்டும். புள்ளியியல், கம்யூ.,
சயின்ஸ் போன்றவற்றில் சேர, கணிதம் தேவை. இந்த பல்நோக்கு தேவையை உணர்ந்து,
கே.வி., பள்ளிகளில், கணிதத்துடன், வணிகவியல் பாடம் உள்ளதால், உயர்
கல்வியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அதனால், மாணவர்கள் அதில் சேர
போட்டி போடுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...