நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜிஎஸ்டி. எனப்படும்
சரக்கு மற்றும் சேவை வரி வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு
வருகிறது. இந்த வரிமுறையை அமல்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் ஜெட்லி
தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. ஆயிரத்து 200-க்கும்
மேற்பட்ட பொருட்களுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவிகிதம் என 4 அடுக்குகளை
கொண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில்
கடந்த வாரம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 15வது
கூட்டத்தில், அனைத்து பொருட்களுக்குமான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு விகிதம்
ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து மத்திய
வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா கூறும்போது, மொத்தம் உள்ள
1,200-க்கும் மேற்பட்ட பொருட்களில் 7 சதவீத பொருட்கள் வரி விலக்கு
பெற்றுள்ளன. 14 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி விதிப்பின்கீழும், 17 சதவீத
பொருட்கள் 12 சதவீத வரிவிதிப்பின்கீழும், 43 சதவீத பொருட்கள் 18 சதவீத
வரிவிதிப்பின்கீழும், 19 சதவீத பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பின் கீழும்
வரும் என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையில் மேலும் சில பொருட்களுக்கு இன்னும் வரி நிர்ணயம் செய்யப்படவில்லை. மேலும் தொலைத் தொடர்பு துறை, நிலக்கரி துறை, தகவல் தொழில்நுட்ப ஹார்டுவேர் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் துறை ஆகிய துறைகளுக்கு விதிக்கப்பட்ட வரி சதவீதம் அதிகம் என பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்துள்ளன. இந்த சூழலில் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ளதால், இது குறித்த முழுமையான முடிவுகள் எட்டப்பட வேண்டியுள்ளது. இதனால் ஜிஎஸ்டி கவுன்சிலின் 16வது கூட்டம் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நாளை கூடுகிறது. இதில் வரி நிர்ணயம் செய்யப்படாத பல்வேறு துறைகளுக்கான வரி விகிதம் முடிவு செய்யப்படும். மேலும் ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னதாக கூடும் கடைசி கவுன்சில் கூட்டமாக இது இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே ஜிஎஸ்டி குறித்த இறுதி முடிவுகள் எட்டப்படும் என்றும் தெரிகிறது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்த உள்ளதால் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...