தமிழகம் முழுவதும், நாளை மறுநாள் கல்லுாரிகள் திறந்ததும், பிளஸ் 1 பாடத்தை
நடத்த, பேராசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த மார்ச்சில், பிளஸ் 2
முடித்த மாணவ, மாணவியர், கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்பில்,
முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும், 16ல், கல்லுாரி துவங்குகிறது.
காலை மற்றும் பிற்பகல் என, இரு வேளை வகுப்புகளிலும், மாணவர்களுக்கு சிறப்பு
நிகழ்ச்சி நடத்தி, புதியவர்களை வரவேற்க, ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு,
பிளஸ் 1 பாடம் மற்றும், 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற முன்தயாரிப்பு வகுப்புகள்
நடத்த, கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன. பிளஸ் 2 முடித்த பெரும்பாலான
மாணவர்களுக்கு, பிளஸ் 1 பாடம் நடத்தப்படாததால், அதற்கான அடிப்படை பாட
வகுப்புகளை, கல்லுாரிகளே நடத்த உள்ளன. மேலும், கல்லுாரிகளில், பாடம்
கற்கும் முறை, பேராசிரியர்களிடம் நடந்து கொள்ளும் விதம், பள்ளிக்கும்,
கல்லுாரிக்கும் பாடம் எடுப்பதில் உள்ள வித்தியாசம் போன்றவற்றை,
ஸ்ரீமுன்தயாரிப்பு வகுப்பில் விளக்கவும், பேராசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...