Home »
» கூகுள் நிறுவனத்துக்கு ரூ.17,425 கோடி அபராதம் !!
இணையதளத்தில் பொருட் களின் விற்பனை, தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு
மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் மோசடி செய்ததாக,
இணைய தேடு தளமான,
'கூகுள்' நிறுவனத்துக்கு, ஐரோப்பிய யூனியன், 17 ஆயிரத்து, 425 கோடி ரூபாயை
அபராதமாக விதித்துள்ளது.
-
இணைய தேடு தளமான கூகுளில், பொருட்களின் விற்பனை சேவைகள் குறித்து
தேடும்போது, தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக,* *அதன்
மீது, ஐரோப்பிய யூனியனின் நிறுவனங்கள் இடையேயான போட்டியை கண்காணிக்கும்*
*அமைப்பில் வழக்கு தொடரப்பட்டது.
5 சதவீதம் கூடுதல் அபராதம்
இது தொடர்பான வழக்குகளை ஏழு ஆண்டுகளாக விசாரித்து வந்த, ஐரோப்பிய யூனியன்,
கூகுள் நிறுவனத்துக்கு, 17 ஆயிரத்து, 425 கோடி ரூபாய் அபராதம் விதித்து
தீர்ப்பளித்துள்ளது. ஒரு நிறுவனம் மீது, ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள
அதிகபட்ச அபராதம் இது. தன் தவறை, கூகுள் நிறுவனம், 90 நாட்களுக்குள் சீர் செய்யாவிட்டால், அதன் தினசரி மொத்த வருவாயில், 5 சதவீதத்தை கூடுதல் அபராதமாக விதிக்கப்படும் என்றும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...