தமிழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் ராமசாமி இன்று வெளியிட்டார்.
வேளாண் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலில் நாமக்கல்லைச் சேர்ந்த கிருத்திகா முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 2,820 வேளாண் படிப்புகளுக்கான மாணவ சேர்க்கை இடங்களுக்கு ஜூன் 16ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு மற்றும் மாணவ சேர்க்கை முடிந்து ஜூலை 24ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு குறித்த தேதிகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, சிறப்பு பிரிவினருக்கு ஜூன் 16ம் தேதியும், பொதுப் பிரிவினருக்கு ஜூன் 19 - 24ம் தேதி வரையும், தொழிற்கல்வி பிரிவினருக்கு ஜூன் 28ம் தேதியும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜூன் 30ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 12-14ம் தேதி வரையில் நடைபெறும். மாணவ சேர்க்கை முடிந்து ஜூலை 24ம் தேதி வகுப்புகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...