Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கிகளில் 14192 அதிகாரி, அலுவலக உதவியாளர் வேலை: ஐபிபிஎஸ் தேர்வு வாரியம் அறிவிப்பு

தற்போது மீண்டும் வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான 14,192 குரூப் 'ஏ' அதிகாரி  மற்றும் குரூப் 'பி' அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வங்கி பணியே தனது ஒரே நோக்கம் என திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு இதுவொரு சரியான சந்தர்ப்பம் எனலாம்.

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உட்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு (பாரத ஸ்டேட் வங்கி தவிர) தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது.

ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை இந்த தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன.  

கடந்த முறை, வங்கிப் பணியாளர் தேர்வு முறையில் ஐபிபிஎஸ் சில அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தது. அதன்படி, எழுத்துத் தேர்வில் புதிதாக மெயின் தேர்வு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முதலில் முதல்நிலைத் தேர்வு நடக்கும். அதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் தகுதி (ரேங்க்) அளிக்கப்படும். முதல் நிலைத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

எழுத்துத் தேர்வில் பொது அறிவு, பகுத்து ஆராயும் திறன் (ரீசனிங்), அடிப்படை கணிதத்திறன், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து ‘அப்ஜெக்டிவ்’ முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

மொத்த காலியிடங்கள்: 14,192

பணியிடம்: இந்திய முழுவதும்

வங்கி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.  Allahabad Up Gramin Bank (UP) - 600
2. Andhra Pradesh Grameena  Vikas Bank (Telangana) - 622
3. Andhra Pragathi Grameena Bank (Andhra Pradesh) - 219
4. Arunachal Pradesh Rural Bank (Arunachal Pradesh) - 05
5. Bangiya Gramin Vikash Bank (WB) - 177
6. Baroda Gujarat Gramin Bank (Gujarat) - 150
7. Baroda Rajasthan Kshetriya Gramin Bank (Rajasthan) - 773
8. Baroda Uttar Pradesh  Gramin Bank (UP) - 738
9. Bihar Gramin Bank (Bihar) - 430
10. Chaitanya Godavari Grameena Bank (Andhra Pradesh) - 225
11. Chhattisgarh Rajya Gramin Bank (Chhattisgarh) - 417
12. Dena Gujarat Gramin Bank (Gujarat) - 105
13. Ellaqai Dehati Bank (Jammu &Kashmir) - 39
14. Gramin Bank Of Aryavart  (UP) - 674
15. Himachal Pradesh Gramin Bank (Himachal Pradesh) - 236
16. J & K Grameen Bank (Jammu &Kashmir) - 243
17.  Jharkhand Gramin Bank  (Jharkhand) - 93
18. Karnataka Vikas Grameen Bank (Karnataka) - 850
19. Kashi Gomti Samyut Gramin Bank - 301
20.  Kaveri Grameena Bank (Karnataka) - 433
21. Langpi Dehangi Rural Bank (Assam) - 33
22. Madhya Bihar Gramin Bank (Bihar) - 374
23.  Madhyanchal Gramin Bank (MP) - 120
24. Maharashta Gramin Bank (Maharashtra) - 345
25. Manipur Rural Bank (Manipur) - 18
26. Meghalaya Rural Bank (Meghalaya)- 53
27. Nagaland Rural Bank (Nagaland) - 05
28. Narmada Jhabua Gramin Bank (MP) - 294
29. Odisha Gramya Bank (Odisha) - 596
30. Pallavan Grama Bank (Tamil Nadu) - 395
31. Pandyan Grama Bank (Tamil Nadu) - 198
32. Paschim Banga Gramin Bank (WB) - 184
33. Pragathi Krishna Gramin Bank (Karnataka) - 845
34. Prathama Bank (UP) - 576
35. Puduvai Bharthiar Grama Bank (Puducherry) - 07
36. Punjab Gramin Bank (Punjab) - 369
37. Purvanchal Bank - 251
38. Rajasthan Marudhara Gramin Bank - 305
39. Saptagiri Grameena BANK (Andhra Pradesh) - 242
40. Sarva Haryana Gramin Bank (Haryana) - 538
41. Sarva Up Gramin Bank  (UP) - 120
42. Saurashtra Gramin Bank (Gujarat) - 144
43. Sutlej Gramin Bank (Punjab) - 24
44. Telangana Grameena BanK (Telangana) - 716
45. Vananchal Gramin Bank   (Jharkhand) - 110
    
தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் பட்டம், உள்ளூர் மொழி அறிவு மற்றும் கணினி பணி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை பட்டம் அல்லது வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், விவசாய பொறியியல், மீன்வளர்ப்பு, வேளாண் விற்பனை மற்றும் ஒருங்கிணைப்பு, தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம் அல்லது கணக்கியல் துறையில் பட்டம், சிஏ, எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் உள்ளூர் மொழி அறிவுவும், கணினியில் பணி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பள விவரம்:
Office Assistant (Multipurpose) பணிக்கு தோராயமாக மாதம் ரூ.19000-22000
Officer Scale - I பணிக்கு தோராயமாக மாதம் ரூ.30000-36000
Officer Scale - II பணிக்கு தோராயமாக மாதம் ரூ.36000-42000
Officer Scale - III பணிக்கு தோராயமாக மாதம் ரூ.41000-47000

விண்ணப்பக் கட்டணம்: அதிகாரி (I, II, மற்றும் III), அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.07.2017 முதல் 01.08.2017 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் வயதுவரம்பு, தகுதிகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/6/30/IBPS-RRB-VI-Recruitment-2017-14192-Officers-Office-Assistant-Posts.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து தெரி்ந்து விண்ணப்பிக்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive