நிறைய வங்கிகள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்களை வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் / அல்லது வங்கிக் கணக்கு அறிக்கைகளில் வழங்குவதில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சொல்கிறது.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) வணிக வங்கிகள், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குப் புத்தகங்களின் போதுமான பணப் பரிவர்த்தனை விவரங்களை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தியிருக்கிறது. 'சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வங்கிக் கணக்குகளில் இடப்படும் உள்ளீடுகள் தொடர்பான குறைந்தபட்ச விவரங்களை வழங்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவிக்கிறது.
இருந்தாலும், இப்போதும் நிறைய வங்கிகள் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்களை வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் / அல்லது வங்கிக் கணக்கு அறிக்கைகளில் வழங்குவதில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சொல்கிறது.
வைப்புநிதி இன்சூரன்ஸ் காப்பீடு
வங்கிகள் 'வைப்புநிதி இன்சூரன்ஸ் காப்பீட்டு' விவரங்களுடன் காப்பீட்டு வரம்பு விவரங்களையும் கணக்குப் புத்தகங்களின் முன்பக்கத்தில் அளிக்க வேண்டும். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் இணையத்தளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்தியாவில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும், வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளுக்கும் சேர்த்து, வைப்புநிதி காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத நிறுவனத்தினால் (DICGC) காப்புறுதி தரப்படுகிறது. ஒரு வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டுத் தோல்வியடைந்தால், DICGC வங்கி வைப்புத் தொகைகளைப் பாதுகாக்கிறது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர்/அவள் வைத்திருக்கும் அசல் மற்றும் வட்டி இரண்டிற்குமான அதே அளவுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு செய்யப்படுகிறது.
ஆர்பிஐ சுற்றறிக்கை
ஜுன் 22 தேதியிடப்பட்ட ஆர்பிஐ சுற்றறிக்கையில், வங்கிகள் கணக்குப் புத்தகத்தில் சேர்க்க வேண்டிய பணப் பரிவர்த்தனைகளின் விவரங்களை அளிக்கிறது. இங்கே சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:
மூன்றாம் தரப்பினருக்குப் பணம் செலுத்துதல்:
(i) பணம் பெறுபவரின் பெயர்,
(ii) பணப் பரிவர்த்தனையின் முறைமை, தீர்வாக வங்கி வணிக நடவடிக்கைகள், இடை - கிளை, ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி, ரொக்கம், காசோலை (எண்)
(iii) பணம் செலுத்தல் வங்கித் தீர்வகம்/வங்கியின் இடை கிளை பரிவர்த்தனை/ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி வழியே செய்யப்பட்டிருந்தால், பணப் பரிமாற்றம் செய்தவரின் பெயர்.
வங்கிக் கட்டணங்கள்:
(i) பரிவர்த்தனையின் தன்மை - கட்டணம்/தரகு/அபராதம்/தண்டனைத் தொகை மற்றும் பல.
(ii) கட்டணங்களுக்கான காரணங்கள், விரிவாக - உதாரணமாக. காசோலை திருப்பம் (எண்), வெளியிடப்பட்ட வரைவோலைக்கான தரகு/கட்டணம்/பணம் அனுப்புதல் (எண்), காசோலை சேகரிப்புக்கான வசூல் கட்டணங்கள் (எண்), காசோலை புத்தகம் வழங்கல், குறுஞ்செய்தி எச்சரிக்கை, ஏடிஎம் கட்டணங்கள், கூடுதல் பணத்தைத் திரும்பப் பெறுதல், மற்றும் பல..
தவறாகப் பெறப்பட்ட வரவுத் தொகைகளைத் திரும்பச் செலுத்துதல்:
(i) வரவு நுழைவு திருப்பிச் செலுத்தப்பட்ட தேதி
(ii) திருப்பிச் செலுத்தியதற்கான காரணங்கள், விரிவாக.
கடன்/கடன் மீது வட்டி ஆகியவற்றின் தவணை மீட்பு:
(i) கடன் கணக்கு எண்
(ii) வங்கிக் கடன் கணக்குதாரரின் பெயர்.
நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை உருவாக்கம்: நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை வங்கிக் கணக்கு/ரசீது எண்
(ii) நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை வைத்திருப்பவரின் பெயர்.
POS-ல் பரிவர்த்தனை (விற்பனை புள்ளி):
(i) பரிவர்த்தனை தேதி, நேரம் மற்றும் அடையாள எண்
(ii) POS இன் அமைவிடம்
பண வைப்பு
(i) அது 'பண வைப்பு' என்பதைச் சுட்டிக்காட்டும்
(ii) பண வைப்பீட்டாளரின் பெயர் - தன்னுடைய/மூன்றாம் தரப்பு.
மூன்றாம் தரப்பிலிருந்து ரசீது:
(i) பணம் அனுப்பியவர்/பணம் மாற்றியவர் பெயர்
(ii) பரிவர்த்தனையின் - தன்மை, இடை கிளை, ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி, ரொக்கம், மற்றும் பல.
(iii) பணம் செலுத்தல் வங்கியின் இடை கிளை பரிவர்த்தனை/ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி வழியே பெறப்பட்டிருந்தால், பணப் பரிமாற்றம் செய்தவரின் பெயர்.
nice
ReplyDelete