சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பது
குறித்து, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை
செய்யும் திட்டம், தமிழகத்தின், நான்கு
மாவட்டங்கள் உட்பட, நாடுமுழுவதும், 100 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
'நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட, நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என, சமீபத்தில் வெளியிடப்பட்ட, தேசிய சுகாதார கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக, நோய்கள் குறித்த மருத்துவப் பரிசோதனை செய்யும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
புற்று நோய்
அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும், 'டயாபடீஸ்' எனப்படும் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் மார்பக, வாய், கர்ப்பப் பை புற்றுநோய்கள் குறித்த பரிசோதனைகள் செய்யும் திட்டத்தை, 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு செய்ய, 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தின் புதுக்கோட்டை, பெரம்பலுார், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவோர்எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நோய்களால் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, இந்த மருத்துவப் பரிசோதனை செய்யும் முறை கொண்டு வரப்படுகிறது. நோய்களால் உயிரிழப்போரில், 52 சதவீதத்தினர், இந்த ஐந்து நோய்களால் உயிரிழக்கின்றனர்.
தேவையான சிகிச்சை
அதை குறைக்கும் வகையிலான இந்த மருத்துவப் பரிசோதனை, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செய்யப்படும். மக்கள் தொகையில், 38 சதவீதத்தினர் இதன் மூலம் பலன் பெறுவர். உலகின் மிகப் பெரிய மருத்துவப் பரிசோதனை திட்டமாக இது விளங்குகிறது. நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தேவையான சிகிக்சையும் அளிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
திட்டம் ஏன்?
இந்த திட்டம்கொண்டு வரப்படுவது குறித்து, மத்திய சுகாதாரத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:• கடந்த, 30 ஆண்டுகளாக, சர்க்கரை நோய் மிகவும் வேகமாகவும் பரவி, அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது
• சர்க்கரை நோயால், கடந்த, 2005ல், 2.24 லட்சம் பேர் உயிரிழந்தனர்; 2015ல் இது, 3.46 லட்சமாக உயர்ந்துள்ளது
• கடந்த, 2015 புள்ளி விபரங்களின்படி, ஏழு கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது
• கேன்சர் எனப்படும் புற்றுநோய்களில், மார்பகம், வாய், கர்ப்பப் பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 34 சதவீதமாக உள்ளது. கடந்த, 2012ல், மார்பக புற்றுநோயால், 70 ஆயிரத்து, 218 பேர் உயிரிழந்தனர்; 1.45 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் தாக்கியுள்ளது
• கர்ப்பப் பை புற்றுநோயால், சராசரியாக, ஆண்டுக்கு, 67 ஆயிரத்து, 500 பெண்கள் உயிரிழக்கின்றனர்; 1.23 லட்சம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்
• வாய் புற்றுநோயால், ஆண்டுக்கு, 52 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்; 77 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...