சென்னை, கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில், தேர்வு எழுதிய
2௫௮ மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில், 59 பேர், தரவரிசையான,
சி.ஜி.பி.ஏ.,வில், 10க்கு, 10 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்களை,
பள்ளியின் முதுநிலை முதல்வர் அஜீத் பிரசாத் ஜெயின் பாராட்டினார்.
அண்ணாநகர், எஸ்.பி.ஓ.ஏ., ஸ்கூல் அண்ட் ஜூனியர் காலேஜ் பள்ளியில், தேர்வு
எழுதிய 805 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 199 மாணவர்கள், ஏ 1 கிரேடான,
10க்கு, 10 சி.ஜி.பி.ஏ., மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களை,
பள்ளியின் முதல்வர் ராதிகா உன்னி வாழ்த்தினார்.
ராஜா அண்ணாமலைபுரம், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், 640 பேர் தேர்வு
எழுதியதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88 மாணவர்கள், 10க்கு, 10
மதிப்பெண்ணுடன் சி.ஜி.பி.ஏ., தரம் பெற்றுள்ளனர். அவர்களை, பள்ளியின்
தாளாளர் மீனா முத்தையா மற்றும் முதல்வர் அமுதலஷ்மி வாழ்த்தினர்.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்திலுள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளியில், தேர்வு
எழுதிய, 129 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 33 பேர், 10க்கு, 10 மதிப்பெண்
தரம் பெற்றுள்ளனர். அவர்களை, சென்னை மண்டல துணை கமிஷனர் எஸ்.எம்.சலீம்
மற்றும் முதல்வர் மாணிக்கசாமி வாழ்த்தினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...