பள்ளிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்காமல் 10 மற்றும் 12-ஆம்
வகுப்புப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ உயரதிகாரி ஒருவர் தில்லியில் செய்தியாளர்களிடம்
ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பள்ளிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்காமல் 10 மற்றும் 12-ஆம்
வகுப்பு பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து முடிவெடுக்க
இயலாது. இந்த யோசனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு
ஆய்வுகளுக்கு உள்படுத்தப்படும். அதன்பிறகே இதுதொடர்பாக இறுதி முடிவு
அறிவிக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் விடைத்தாள்கள்
திருத்தப்படுவதில் தவறுகள் நேரிடுவதாக சிபிஎஸ்இக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, அதுதொடர்பாக ஆய்வு செய்து அப்பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை
வழங்குமாறு 2 குழுக்களை சிபிஎஸ்இ அமைத்தது.
அந்தக் குழுக்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மார்ச்
மாதத்தில் வழக்கம்போல் நடத்தாமல் பிப்ரவரி மாதத்திலேயே நடத்தலாம் என்று
பரிந்துரை அளித்தது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 10, 12 பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: சிபிஎஸ்இ.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...