2016-2017 கல்வி ஆண்டின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்கனவே சமீபத்தில் கடந்த2016 ஆகஸ்ட் மாதம் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில் அதே மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப மீண்டும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறும் என அரசு திடீரென அறிவித்துள்ளது. இது ஆசிரியர்களை மிகுந்தஅதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
கல்வித்துறையின் இந்த குறுகிய காலதிடீர்அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக
உள்ளது. பல ஆண்டுகளாக சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் பெற நினைக்கும்
ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு மாறுதல் வாய்ப்பு இதனால் மறுக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் கடந்த ஆண்டில் கடினமாக உழைத்ததால் அரசு பள்ளிகளின்
தேர்ச்சிவிகிதம் அதிகரித்துள்ளது.மேலும் அரசின் சமீபத்திய பல்வேறு
அறிவிப்புகளால் இந்த ஆண்டில் அரசுபள்ளிகளில்மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பணிநிரவலில்ஆசிரியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவாக
இருந்தது.கடந்த காலங்களில் பணிநிரவலில் ஒரு ஆசிரியரை வேறு பள்ளிக்கு
மாற்றிய பின்னர்அதே பணியிடத்தில் TET தேர்வு மூலம் புதிய ஆசிரியரை நியமனம்
செய்த வரலாறும்உண்டு.
எனவே ஏற்கனவே அறிவித்தபடி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வினை மே 29,30
தேதிகளில்நடத்த வேண்டும் எனவும், பணிநிரவலை தற்சமயம் நடத்தாமல்
உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வுக்கு பின்னர், அடுத்த கல்வி
ஆண்டின் எண்ணிக்கைக்கு ஏற்பநடத்த வேண்டும் எனவும் ஆசிரியர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.இதனால் அரசு பணிநிரவலை மேற்கொள்ளக்கூடாது என வேண்டுகோள்
விடுத்துள்ள ஆசிரியர்சங்கங்கள், நீதிமன்றம் சென்று பணிநிரவலுக்கு தடை
உத்தரவு பெறவும் நடவடிக்கைஎடுத்து வருகின்றன.
Education minister and AIADMK partymen , officers in education Dept. are getting crores of amount for tranfer. So we can't expect genuine transfer.
ReplyDelete