Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 8.5.2017

மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ரிஷபம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
மிதுனம்
நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
கடகம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு-. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
கன்னி
மாலை 6. 52 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
துலாம்
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 6. 52 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
விருச்சிகம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். உறவினர்கள் உதவுவார்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
தனுசு
உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
மகரம்
குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
கும்பம்
மாலை 6. 52 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
மீனம்
பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மாலை 6. 52 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive