மேஷம்
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால்
அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான
திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை
சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ரிஷபம்
புதிய
திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.
அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள்
தேடி வரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மிதுனம்
எதிர்பார்ப்புகள்
தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பயணங்கள்
திருப்திகரமாக அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் அதிரடி
சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை
முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
கடகம்
பேச்சில்
கம்பீரம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள்.
அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின்
ஆலோசனை ஏற்கப்படும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
சிம்மம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும்.
குடும்பத்தில் அமைதி திரும்பும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை
திருப்பித் தருவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும்.
உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பர்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
கன்னி
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. கணவன்-
மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து விலகும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும்.
முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம்
ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
துலாம்
எதிர்காலம்
பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள்
உண்டு. அரசு காரியங்கள் இழுபறியாகும். சாலைகளை கவனமாக கடந்துச்
செல்லுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில்
மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
விருச்சிகம்
அதிரடியாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். சுப
நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும.
வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில்
உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
தனுசு
சோர்வு
நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து
செயல்படுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
மகரம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வராது
என்றிருந்த பணம் வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும். நட்பு வட்டம்
விரியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள்
உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கும்பம்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள்.
அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். சிலர் உங்களை
தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்
போகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
மீனம்
சவாலான
விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும்.
கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள்.
வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி
உங்களை மதிப்பார்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...