மேஷம்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில்
உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ரிஷபம்
மனதிற்கு
பிடித்தவர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் விவாதங்கள் வந்துப்
போகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பயணங்களால் அலைச்சல்
இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள்.
அலுவலகத்தில் அமைதி நிலவும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
மிதுனம்
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை
ஏற்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புது வாகனம்
வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
கடகம்
குடும்பத்தில்
மகிழ்ச்சி தங்கும். முகப்பொலிவுக் கூடும். விருந்தினர்களின் வருகையால்
வீடு களைக்கட்டும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கேட்ட
இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
சிம்மம்
மாலை
3. 25 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப்
போட்டு பார்க்க வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில்
ஈடுபட வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில்
லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கன்னி
குடும்பத்தில்
விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு
பேசாதீர்கள். வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில்
சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலை 3. 25 மணி முதல் ராசிக்குள்
சந்திரன் செல்வதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
துலாம்
கணவன்-மனைவிக்குள்
மனம் விட்டு பேசுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில்
மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உறவினர் ஒருவரை
சந்திப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
விருச்சிகம்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு.
நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன்
ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
தனுசு
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு, வாகனத்தை சீர்
செய்வீர்கள். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
மகரம்
மாலை
3. 25 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு
ஏமாற்றமும் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச
வேண்டாம். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள்
வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கும்பம்
பிள்ளைகள்
நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். ஆடை, அணிகலன்
சேரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை
எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மாலை 3.
25 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனமுடன் செயல்பட
வேண்டும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
மீனம்
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
மனதிற்கு இதமான செய்திகள் வரும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புதுப்
பொருள் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.
அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...