மேஷம்
காலை
8.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன்
செயல்படப் பாருங்கள். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர்
நீங்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வராது என்றிருந்த பணம் வரும்.
நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில்
உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ரிஷபம்
காலை
8. 15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு
மனப்பான்மை தலைத் தூக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம்.
நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன்
அதிகரிக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
மிதுனம்
எடுத்த
வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக
இருப்பார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள்
இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
கடகம்
உங்கள்
போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.
சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில்
அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
சிம்மம்
நீண்ட
நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து
சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
கன்னி
காலை
8. 15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானித்து
செயல்படப்பாருங்கள். பிற்பகல் முதல் இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம்
யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்களின் ஆதரவுக்
கிட்டும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள்
ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
துலாம்
காலை
8. 15 மணி முதல் சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு
முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும்.
அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில்
போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப்
பார்க்க வேண்டி வரும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
விருச்சிகம்
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள்
கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத
தன லாபம் உண்டு. உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
தனுசு
எதிர்பாராத
பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.
அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது
யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை
ஏற்பர்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
மகரம்
புதிய
சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் நெளிவு,
சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை
மதிப்பார்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
கும்பம்
எதிர்ப்புகள்
அடங்கும். நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும்.
வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும்.
வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை
முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
மீனம்
தன்னிச்சையாக
சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய
வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு
நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...