மேஷம்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து
நீங்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். அடுத்தவர்களை
குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள்.
உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
ரிஷபம்
பழைய
கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உதவிக் கேட்டு உறவினர்,
நண்பர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். யாரையும் பகைத்துக்
கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில்
மேலதிகாரியால் பிரச்னைகள் வரும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
மிதுனம்
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை
ஏற்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப்
புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள்
தருவார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கடகம்
சொன்ன
சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு.
நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் முக்கிய
முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
சிம்மம்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். புதியவர்கள்
அறிமுகமாவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது
தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
கன்னி
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய
செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். உதவி செய்வதாக
வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரம், உத்யோகத்தில்
மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
துலாம்
உங்கள்
பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். தாயாரின்
உடல் நலம் சீராகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது
வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
விருச்சிகம்
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்பார். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில்
ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்
தருவார்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
தனுசு
மற்றவர்களை
நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.
பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள்
பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.
உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
மகரம்
திட்டமிட்ட
காரியங்கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து
நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில்
பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி
முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
கும்பம்
சவாலில்
வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப்
பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.
வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில்
உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
மீனம்
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். முகப்பொலிவுக் கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி
மகிழ்வீர்கள். சகோதரங்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வியாபாரத்தில்
அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...